என்னது பிரியாணி இல்லையா?...தேர்தல் விலைப்பட்டியலில் பிரியாணி 'மிஸ்சிங்': அரசியல் கட்சிகள் அதிர்ச்சி

Mar 17, 2026,05:08 PM IST

சென்னை: தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் பணிகள் தீவிரமடைந்து வருகிறது. தேர்தலை முன்னிட்டு வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் மேற்கொள்ளும் தேர்தல் பிரச்சார செலவுகளைக் கண்காணிக்க, தேர்தல் ஆணையம் பல்வேறு பொருட்களுக்கான அதிகாரப்பூர்வ விலைப்பட்டியலை வெளியிட்டுள்ளது. ஆனால், இதில் தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத அங்கமாக விளங்கும் 'பிரியாணி' இடம்பெறாதது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.


விலை நிர்ணயம் செய்த தேர்தல் ஆணையம் :


தேர்தல் நேரங்களில் வேட்பாளர்கள் கணக்குக் காட்டும் செலவுகளில் முறைகேடுகளைத் தவிர்க்க, ஒவ்வொரு தேர்தலின் போதும் தேர்தல் ஆணையம் ஒரு விலைப்பட்டியலை (Rate Chart) வெளியிடுவது வழக்கம். அந்த வகையில், 2026 தேர்தலுக்காக வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் பிளக்ஸ் பேனர்கள், கொடிகள், தோரணங்கள்.வாடகை வாகனங்கள் மற்றும் மேடை அமைப்பதற்கான செலவுகள். நாற்காலிகள், ஒலிபெருக்கிகள் மற்றும் விளம்பரப் பொருட்கள், சிறிய வகை தின்பண்டங்கள் மற்றும் குடிநீர் பாட்டில்கள் உள்ளிட்ட பல பொருட்களுக்குத் தனித்தனியே விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வேட்பாளர்கள் தங்கள் பிரச்சாரத்தின் போது இந்தப் பொருட்களைப் பயன்படுத்தினால், தேர்தல் ஆணையம் நிர்ணயித்துள்ள இந்த விலையின் அடிப்படையிலேயே அவர்களின் தேர்தல் செலவுக் கணக்கில் சேர்க்கப்படும்.


பிரியாணி இல்லாததால் குழப்பம் :




தமிழக அரசியல் கூட்டங்கள் என்றாலே அங்கு தொண்டர்களுக்கும், பொதுமக்களுக்கும் வழங்கப்படும் சாப்பாடு (Meals), சிக்கன் பிரியாணி மற்றும் மட்டன் பிரியாணி ஆகியவை முக்கிய இடத்தைப் பிடிக்கும். ஆனால், தற்போது தேர்தல் கமிஷன் வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் இந்தப் பிரதான உணவு வகைகளுக்கான விலை விவரங்கள் இடம்பெறவில்லை. இதனால், பிரச்சாரத்தின் போது உணவுகள் வழங்கப்பட்டால் அதன் செலவை எதன் அடிப்படையில் கணக்கிடுவது என்பதில் அரசியல் கட்சிகளிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது. பட்டியலில் இல்லாத உணவுகளை வழங்கினால், அதற்கான செலவை வேட்பாளர்கள் எவ்வாறு கணக்குக் காட்ட வேண்டும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.


அரசியல் கட்சிகளின் கோரிக்கை :


பட்டியலில் பிரியாணி மற்றும் முழு உணவுகள் விடுபட்டிருப்பது குறித்து தேர்தல் ஆணையம் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என அரசியல் கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர். "பட்டியலில் இல்லாத பொருட்களுக்கு ஒருவேளை சந்தை விலையை விடக் கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ கணக்கிடப்பட்டால், அது வேட்பாளரின் மொத்த தேர்தல் செலவு வரம்பைப் பாதிக்கும்" என அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர். தேர்தல் ஆணையம் இந்தப் பட்டியலில் திருத்தங்களை மேற்கொண்டு, விடுபட்ட உணவுப் பொருட்களுக்கான விலையையும் முறைப்படி அறிவிக்குமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தண்ணீர் திறந்தது கர்நாடகா : காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

news

"தனிமைப்பட்டு நிற்கிறார் CM" – காவிரி விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்

news

கொளத்தூர் தொகுதியில் தேர்தல் முறைகேடு? - திமுக என்.ஆர்.இளங்கோ பரபரப்பு பேட்டி!

news

ஒற்றுமையின்றி செயல்படுபவர்களுக்கு கட்சியில் இடமில்லை : ராகுல் காந்தி எச்சரிக்கை

news

கபிணி அணையிலிருந்து தண்ணீர் திறப்பு.. போராட்டக்காரர்களுக்கு டி.கே.சிவக்குமார் எச்சரிக்கை

news

வணிக பயன்பாட்டு எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.200 குறைவு: ஓட்டல் உரிமையாளர்கள் நிம்மதி!

news

வேளாண் பட்ஜெட் 2026: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைத்து சிறப்பு பூஜை செய்த அமைச்சர் வினோத்!

news

கட்டணச்சலுகை இல்லாவிட்டாலும் UDID அட்டை இருந்தால் சிறப்பு பெட்டிகளில் பயணிக்கலாம்!

news

தோப்பு வெங்கடாசலம் கட்சிப் பொறுப்பிலிருந்து விடுவிப்பு: திமுக தலைமை அதிரடி அறிவிப்பு!

அதிகம் பார்க்கும் செய்திகள்