- ஸ்வர்ணலட்சுமி
பண்டிகை என்றாலே அனைவரின் மனதிலும் முகத்திலும் சந்தோஷம் நிரம்பி இருக்கும். அதுவும் தீபாவளி பண்டிகை என்றாலே அனைவருக்கும் ஒரே குஷி தான். புத்தாடைகள் உடுத்தி பலவித பலகாரங்கள் பகிர்ந்து உண்டு, பட்டாசு வெடிச்சத்தத்துடன், தீப ஒளி வெளிச்சத்துடன் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மகிழ்வோடு கொண்டாடும் பண்டிகை "தீபாவளி".
ஆனாலும் குடும்பத் தலைவிகள் மனதில் ஒரு பதற்றம் இருக்கும். ஏனெனில்,வீட்டை சுத்தம் செய்ய வேண்டும் அழகு படுத்த வேண்டும். ஒரே நாளில் எப்படி? செய்வது என்பதுதான். இந்த பதட்டத்தை தவிர்க்க, ஒரே நாளில் சுத்தம் செய்யாமல் தினமும் ஒரு மணி நேரம் அல்லது அரை மணி நேரம் ஒதுக்கினாலே போதும். வேலைக்குச் செல்பவர்கள் வார இறுதியில் சுத்தம் செய்வது சிறப்பு. அதற்கான சில டிப்ஸ் பார்க்கலாமா...
1. உபயோகம் இல்லாததை அகற்றவும்:
நம் வீட்டில் உள்ள தேவையற்ற பொருட்களான உடைந்த பிளாஸ்டிக் பொருட்கள், குழந்தைகளுடைய உடைந்த விளையாட்டு சாமான்கள், பழைய செய்தித்தாள்கள், புத்தகங்கள், அட்டைப்பெட்டிகள், பழையது வாங்குபவரிடம் விற்பது நிறைய இடம் வீட்டில் காலியாகும்.
2. புத்தாடைகளை வாங்கி குவியும் நேரம் தீபாவளி பண்டிகை. எனவே, பழைய ஆடைகள், புடவைகள், ஷர்ட், பேண்ட், சுடிதார்கள், குழந்தைகளுடைய சிறிய ஆடைகள் இருப்பின் அதனை தானமாக கொடுப்பது சிறப்பு. (இவை அனைத்தையும் ஒரு 45 நிமிடம் செலவழித்து ஒரு பெரிய பையில் போட்டு வைக்கவும்). பீரோவில் உள்ள ஆடைகளை சீராக அடுக்கி வைத்து, புத்தாடைகளை ஒரு இடத்தில் அடுக்கி வைக்கவும்.

3. அடுத்து சமையலறை பக்கம் போவோமா... வேண்டிய உணவுப் பொருட்களை ஒழுங்காக அடுக்கி வைப்பது, எண்ணெய் பாட்டில்களை ஒரு ட்ரேயில் வைத்து ஒழுங்குபடுத்துதல், காலாவதியான உணவுப் பொருட்கள், மற்றும் மசாலா பொருட்கள் இருப்பின் அதனை அப்புறப்படுத்தவும்.
4. அஞ்சறைப்பெட்டியில் உள்ளவற்றை ஒரு கப்பில் போட்டு அதனை சுத்தம் செய்து, பிறகு புதியதாக மசாலா பொருட்களை நிரப்பி வைக்கவும். அரிசி பருப்பு வகைகள் போடும் டப்பாக்களை சுத்தம் செய்து அழகாக ஒழுங்குப்படுத்தி அடுக்கி வைக்கவும்.
5. தேவையான அளவான சில்வர் பாத்திரங்களை வரிசையாக அடுக்கி வைத்துக் கொண்டு தேவையில்லாத பாத்திரங்களை பரண்மேல் போடவும். டம்ளர், கப், பிளேட்டுகள், பாத்திரங்கள், ஹாட் பாக்ஸ் என தனித்தனியாக பிரித்து வைக்கவும்.
6. சமையல் மேடை, டைல்ஸ், அடுப்பு இவற்றில் உள்ள எண்ணெய் பிசுக்குகளை நீக்க வினிகர், பேக்கிங் சோடா அல்லது பிரத்யேக கிச்சன் கிளீனிங் ஸ்ப்ரே அல்லது பாத்திரம் கழுவும் லிக்விட் ஊற்றி சுத்தம் செய்து சுத்தமான துணியால் துடைக்கவும்.
7. ஃப்ரிட்ஜில் உள்ள பொருட்களை அகற்றி பேக்கிங் சோடா பயன்படுத்தி துடைக்கவும். காய், பழம், பால் வைக்கும் ட்ரேவை கழுவி சுத்தம் செய்து வைக்கவும். கருவேப்பிலை, மல்லி தழை போடும் டப்பாக்களை சுத்தப்படுத்தி வைக்கவும்.
8. தீபாவளிக்கு பலகாரங்கள் செய்வதாக இருந்தால் அதற்கான பாத்திரங்களை எடுத்து சுத்தம் செய்து தயார் நிலையில் வைக்கவும்.
9. படுக்கை அறையில் உள்ள மெத்தை விரிப்புகள், தலையணை உறைகள்,கால்மிதிகள், போர்வைகள், ஸ்கிரீன் துணிகளை துவைத்து மாற்றி வையுங்கள். இதற்கு ஒரு மணி நேரம் செலவு செய்தால் போதும்.
10. வரவேற்பு அறையில் உள்ள சோபா, மேஜை, நாற்காலிகளை துடைத்து, அதன் விரிப்புகளை துவைத்து மாற்றவும். டிவி மேஜை மேல் உள்ள அலங்கார பொருட்களை துடைத்து வைக்கவும்.
11. கதவு, ஜன்னல் கண்ணாடி, ஷோகேஸ் கண்ணாடி, அலங்கார போட்டோக்கள் ஆகியவற்றை சோப் ஆயில் கொண்டு சுத்தம் செய்யவும். நிலைவாசற் படியை துடைத்து சுத்தம் செய்யவும். நிலைவாசற்படி சுத்தமாக இருந்தால் லட்சுமி கடாட்சம் பெருகும்.
12. பூஜை அறையில் உள்ள போட்டோக்களை சுத்தமான துணியால் துடைத்து, பித்தளை விளக்கு, செம்பு பூஜை சாமான்கள் அனைத்தையும் கோதுமை மாவு,மஞ்சள், கல் உப்பு, எலுமிச்சை சாறு கொண்டு சுத்தம் செய்யலாம். வெள்ளிப் பொருட்கள் இருப்பின் டூத் பேஸ்ட் பயன்படுத்தி கழுவி சுத்தம் செய்யலாம். அல்லது அதற்குரிய லிக்விட் பயன்படுத்தலாம்.
13. சீலிங் ஃபேன்,டியூப் லைட் சுத்தம் செய்ய நிலையான ஏணிகளை பயன்படுத்தி துடைப்பது சிறப்பு.
14. பாத்ரூம் டைல்ஸ் சுத்தம் செய்ய வினிகர்,பேக்கிங் சோடா கலந்து அதற்குரிய பிரஷ்களை பயன்படுத்தலாம். புதிய ஏர் பியூரிஃபையர் மாற்றி வைக்கலாம்.
15. செருப்பு,ஷூக்களை அங்கும் இங்குமாக வைக்காமல் அதற்குரிய செப்பல் ஸ்டாண்ட் வாங்கி அடுக்கி வைக்கவும்.
அப்பாடா....எப்படியோ... ஒரு வகையாக வீடு சுத்தமாகிவிட்டது. இனி தீபாவளி கொண்டாட நோ டென்ஷன். இல்லையா பாஸ்.. எங்க? போறீங்க... வீடு சுத்தம் செய்ய ரெடி ஆகி விட்டீர்களா?...
மேலும் இது போன்ற சுவாரஸ்யமான, பயனுள்ள தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன். எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி பாலசுப்ரமணி.
தீபாவளிப் பண்டிகையும் பாரம்பரிய கறிச்சோறு விருந்தும்!
கடல் கன்னி
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வீடு சுத்தம் செய்ய ... சூப்பரான 15 டிப்ஸ்!
விடிந்தும் விடைபெற மனமில்லா மதி!
பிரியாணி கொடுத்தால் வேணாம்னா சொல்லுவேன்? பொது வேட்பாளர் கேள்விக்கு சீமான் கொடுத்த பதில்
தீபாவளி அலப்பறைகள்.. 2கே கிட்ஸ் உங்களுக்கெல்லாம் இது கனவுதாம்லே!
மூத்த நடிகை வத்சலா ராஜகோபால் காலமானார்: திரையுலகினர் இரங்கல்!
"சிறையில் என்னால் சாப்பிடக் கூட முடியவில்லை" - நீதிமன்றத்தில் அன்பில் மகேஷ் பரபரப்பு வாதம்!
ஓமனில் 'தமிழ்நாடு நாள் விழா - 2026' கோலாகலம்.. கலைப் போட்டிகள் மற்றும் சிறப்பு நிகழ்வுகளுடன்!
{{comments.comment}}