கடல் கன்னி

Oct 30, 2026,03:33 PM IST

- ஜோசப் சாம்ராஜ்


நாங்கள் சிறுவயதில் கன்னித்தீவு கதையை தினமும் தேடித்தேடி படிப்போம். நண்பன் 'சத்திரப்பட்டி' கண்ணன் 

சொல்லும் கதையை வாய்பிளந்து கேட்போம். மணி அடிக்கும் சப்தம் கேட்டும் வகுப்பிற்குப் போகாமல் அடிவாங்கிய அனுபவம்கூட உண்டு. 


வானத்தில் சூரியன் மெதுவாக உயரும் நேரத்தில், நாங்கள்கூட மெதுவாக சாத்தூர் தாண்டி 'தாயில்பட்டி'யில் விஜய் 

கரிசல் குளம் தொல்பொருள் ஆராய்ச்சி கண்டு வியந்துகொண்டே, ராஜபாளையம் தாண்டி, மேற்குத் தொடர்ச்சி மலையில் இருந்து விழும் அய்யனார் நீர்வீழ்ச்சி நோக்கிச் சென்றது எங்கள் கார். 


போகும் வழியில் தேன்கலந்த தேனீர் கிடைத்தது. வழியெங்கும் மாந்தோப்பு, தென்னந்தோப்பு என 'மினி கேரளா' போல இருந்தது. கண்ணாடியை இறங்கி, வண்டு சப்தம்..., தென்றல் காற்று  என மெல்ல உணர்ந்து கொண்டே மரத்தின்மேலே தொங்கும் வௌவால் பார்த்துவிட்டு, வழிந்தோடும் அருவியில் உடல் குளிர குளித்துவிட்டு, அங்கு நடைபெறும் கண்காட்சிக்குச் சென்றோம். 




'வேற லெவல்' கண்ணாடிக்கு நடுவில் நடந்து செல்வதுபோல அமைத்திருந்தனர். வண்ணமீன் வகைவகையான மீன்கள் பார்த்து மனசு துள்ளியது. பலரும் தங்களை மீன்களோடு படம் எடுத்து தள்ளினர். நிறைய மீன்கள் 'போங்கடா...' என்று தூங்கிக்கொண்டு இருந்தது. 


நம் சின்ன வயதில் படித்த 'கடல் கன்னி' நீந்திய காட்சி, 'அடக்கடவுளே! மொத்த கூட்டமும் கிறுகிறுத்துபோனது.' நம்  இதயம் மாதிரி கை வைத்தால், அதுவும் நம் கையை தொடுவதும், சின்னக் குழந்தைகளுக்கு முத்தமிடுவதும், கடலில் ஆழத்தில் நடக்கும் அற்புதமான நிகழ்வு போல இருந்தது. 


நம் சிறுவயதில் படித்த கதைகள் இப்போது பார்க்கப் பார்க்க வியப்பு. நமக்குக்கூட அப்படி வால் இருந்தால், கடலின் ஆழத்தில் வசிக்கப் போய்விடலாம் தானே! 


வெளியே வந்து பாப்கார்ன் வாங்கிக் கொண்டு, மேம்பாலம் தாண்டி வீடு வந்து சேர்ந்தோம். ஆனால் 'கடல் கன்னி' நினைவாகவே இருந்தது. வானத்தை பார்த்தேன்... வானத்தில் மேகங்கள் மெதுவாகப் போய்க்கொண்டு இருந்தன.


(கட்டுரையாளர் த. ஜோசப் சாம்ராஜ், ஆசிரியர். குருவி குளம் சரகம், தென்காசி மாவட்டம். 33வருடங்கள் ஆசிரியர் பணி. சாலமன் பாப்பையா கற்றுக் கொடுத்த மேடைபேச்சுக் கலை மற்றும் நகைச்சுவை பேச்சைத் தொடர்கிறார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தீபாவளிப் பண்டிகையும் பாரம்பரிய கறிச்சோறு விருந்தும்!

news

கடல் கன்னி

news

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வீடு சுத்தம் செய்ய ... சூப்பரான 15 டிப்ஸ்!

news

விடிந்தும் விடைபெற மனமில்லா மதி!

news

பிரியாணி கொடுத்தால் வேணாம்னா சொல்லுவேன்? பொது வேட்பாளர் கேள்விக்கு சீமான் கொடுத்த பதில்

news

தீபாவளி அலப்பறைகள்.. 2கே கிட்ஸ் உங்களுக்கெல்லாம் இது கனவுதாம்லே!

news

மூத்த நடிகை வத்சலா ராஜகோபால் காலமானார்: திரையுலகினர் இரங்கல்!

news

"சிறையில் என்னால் சாப்பிடக் கூட முடியவில்லை" - நீதிமன்றத்தில் அன்பில் மகேஷ் பரபரப்பு வாதம்!

news

ஓமனில் 'தமிழ்நாடு நாள் விழா - 2026' கோலாகலம்.. கலைப் போட்டிகள் மற்றும் சிறப்பு நிகழ்வுகளுடன்!

அதிகம் பார்க்கும் செய்திகள்