தேர்தல் முடிந்ததும் ஒவ்வொரு கிராமத்திற்கும் வந்து மக்களை சந்திப்பேன்: தவெக தலைவர் விஜய் பேச்சு!
வேலூர்: உங்கள் எல்லாரையும் சந்திக்க வேண்டும் என்பது எனது ஆசை. ஆனால் சூழ்ச்சி செய்து தடை போடுகிறார்கள். ஒரு வாக்குறுதி கொடுக்கிறேன். நம்ம ஆட்சி அமைந்தது ம் ஒவ்வொரு கிராமமாக வந்து உங்கள் அனைவரையும் சந்திக்கிறேன் என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
வேலூர், கொல்லமங்களத்தில் நடைபெற்ற நிர்வாகிகள் சந்திப்பில் விஜய் பேசுகையில், எங்கள் ஓட்டு எங்கள் உரிமை. எங்களை யாரும் விலைக்கு வாங்க முடியாது. எங்கள் ஓட்டு விசில் சின்னத்துக்குதான். யாரையும் நம்பி ஏமாற மாட்டோம். எங்கள் வார்த்தையில் இருந்து மாற மாட்டோம். இது நிஜயம் என தொண்டர்களுடன் உறுதிமொழியேற்புடன் பேசத்தொடங்கினார் விஜய். அதன்பின்னர் அவர் பேசு்கையில், தமிழ்நாடு சூப்பர் ஸ்டார் மாநிலம் தான். அது காமராஜர் காலத்தில், அண்ணா காலத்தில், எம்ஜிஆர் காலத்தில். இன்றைக்கு சூப்பர் ஸ்டேண்டப் காமெடிக்காரர் நடத்துற மாநிலமா மாறிடுச்சு.
உங்கள் எல்லாரையும் சந்திக்க வேண்டும் என்பது எனது ஆசை. ஆனால் சூழ்ச்சி செய்து தடை போடுகிறார்கள். ஒரு வாக்குறுதி கொடுக்கிறேன். நம்ம ஆட்சி அமைந்ததும் ஒவ்வொரு கிராமமாக வந்து உங்கள் அனைவரையும் சந்திக்கிறேன். தமிழக சட்டசபை தேர்தல் விஜய்க்கும் ஸ்டாலின் சாருக்கும் நடக்கும் போர். என் மீது அவதூறு பரப்பி, அசிங்கமாக பேசினால் அது மக்களுக்கு எதிராக பேசுவதாக அர்த்தம். மக்களும் விஜய்யும் உடலும் உயிரும் மாதிரி. இதை யாராலும் பிரிக்க முடியாது.
திமுக.,வை ஸ்விட்ச் ஆஃப் பண்ண ஒரே வழி தேர்தலில் விசில் சின்னத்திற்கு நேராக உள்ள பட்டனை அழுத்துங்க. மக்களை நேசிக்கிற நல்ல தலைமை இல்லாததால், இத்தனை ஆண்டுகள், வேறு வழியில்லாமல், ஸ்டாலின் சார் கொடுத்த பொய்யான வாக்குறுதிகளை நம்பி ஏமாந்த நம்ம மக்களுக்கு, சரியான நேரத்தில், வெகுஜன மக்கள் இயக்கமாக வந்தது தான் தவெக. உண்மையிலேயே வருகின்ற சட்டமன்ற தேர்தல் தமிழ்நாட்டு மக்களுக்கும் ஊழலுக்கும் நடக்கும் போர். தமிழ்நாட்டுக்கும் லஞ்சத்துக்கும் நடக்கும் போர். தமிழ்நாட்டுக்கும் நிர்வாகத்தை சரியாக நடத்தாத திமுக அரசுக்கு நடக்கும் போர். விஜய்க்கும் ஸ்டாலின் சார்க்கும் நடக்கும் போர்.
இந்த தேர்தல் 50 வருடங்களுக்கு ஒருமுறை நடக்கும் அதிசய தேர்தல், இந்த தேர்தலில் தான் அனைவரும் சேர்ந்து விஜய் என்ற ஒருவனை எதிர்க்கிறார்கள். விஜயும் தமிழக மக்களும் வேறு வேறு அல்ல, விஜயும் தமிழக மக்களும் ரத்தமும், சதையும் போன்றவர்கள். தவெகவிற்கு எதிரான அவதூறுகள் மக்களுக்கு எதிரான அவதூறுகள். மக்களை நேசிக்கும் விஜய் வேண்டுமா? மக்கள் விரோத ஸ்டாலின் சார் வேண்டுமா?
சின்னவர்கள், பெரியவர்கள், அனுபவம் இருப்பவர்கள், இல்லாதவர்கள் என்பது எல்லாம் விசயம் கிடையாது. யாராக இருந்தாலும் அந்த சூழலுக்கு ஏற்ற மாதிரி, சூழ்நிலைக்கு ஏற்ற மாதிரி செயல்பட்டு அந்த பிரச்சனையைத் தீர்க்கிறான் அது தான் விசயம். அறிவாலயம் பக்கத்துல யாரு நிழலுக்கு ஒதுங்குனாலும் கூட்டணியில சேத்துக்கிறது. கொள்ளையடிச்சு வச்சிருக்கிற பணத்துல பங்கு கொடுகு்கிறது. அதுக்கு பேரு கள்ளாப்பெட்டி கூட்டணினு வச்சிருக்கேன். கள்ளாப்பெட்டி கூட்டணிய ரொம்ப கஷடப்பட்டு சேர்த்திருக்கிறார்கள். பழைய கூட்டணி கணக்கெல்லாம் வச்சி ஜெயிக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.