Tamil Poem by Ilangovan: உயிரும் நீயே.. உணர்வும் நீயே!
Apr 17, 2026,03:52 PM IST
- சி. இளங்கோவன்
உயிரைத் தந்து
உலவச் செய்தவள்
நீயே
உணர்வில் கூட
என்னை அறிந்தவள்
நீயே
உன்னைப் போலொரு
அன்பைப் பொழிந்தவர்
இல்லை
நீயும் காட்டும்
அன்புக்கு எல்லை
இல்லை
பட்டினி கிடந்தும்
எந்தன் பசியைத்
தீர்த்தவள்
பசியை நானும்
அறியா வண்ணம்
வளர்த்தவள்
மூப்பை அடைந்து
இறைவன் அழைக்கும்
வரையிலும்
பணிவிடை செய்து
எந்தன் கடனைத்
தீர்க்கனும்
மகளின் வடிவில்
வந்தும்
மகிழ்வித் தாயே
(கவிஞர் சி. இளங்கோவன், வேலூர், வேலூர் மாவட்டம். தமிழ் அருவி வழங்கும் சிறப்புக் கவியரங்கத்தில் கலந்து கொண்டு பாடப்பட்ட கவிதை)