வயதானாலும் நாங்களும் நல்லுள்ளங்களே!

Apr 15, 2026,05:04 PM IST

- டிலாணி ஸ்ரீதரன்


தாயவளுக்கு

வலியுணர்த்தி வையகத்தில் 

பெண்ணாக 

பிறந்து,


மழலையாக

மகுடம் சூட்டி

மனையில்

தாய்மடி தவழ்ந்து,


கண்ணியம்

கட்டுப்பாடென

முட்டிமோதி

முகம் மலர்ந்து,




பேதையிவள்

பேராசையாக கல்வியிலும்

கால்தடம் பதித்து,


பெதும்பை வயதில்

ஓடியாடி சந்தோசமாகத் திரிந்து,


மங்கையாக 

தேகத்தில் சில மாற்றங்களுடன் 

பூப்படைந்து,


மடந்தையிவள் மனதில்

காதலும்  காற்றாக நுழைந்து,


அரிவையென

அன்பையும்

அரவணைக்கும்

காதலனிடம்

விதைத்து,


தெரிவையாகவே

அவனை மணவறையில்

மனதார மணந்து,


மன்னவன் அவனின் 

ஆசைகளுக்கும்

ஆகினால் விருந்து,


பேரிளம் பெண்ணாக

பெற்றெடுத்தாள் குழந்தையை வியந்து,


குழவியைத் தந்தவனை

மண்ணுக்குள் அழைத்தது

கோரவிபத்து,


பிறந்தவைகளை வளர்க்க

இரவையும் இரவலாக்கினாள்

கண்விழித்து,


ஊனுறக்கம் இல்லாமல்

உடலும் போனது மெலிந்து,


குடும்பத்திற்காக வேலையும் பார்க்கணும் 

வளைந்து நெளிந்து,


வாழ்வில் வெற்றிக்காண

ஓடாய்த் தேயவேண்டும் ஆசைகள் துறந்து,


நித்தமும் நிம்மதியில்லாத

ஓட்டம் அதிகாலையிலே எழுந்து,


வீட்டு வேலைகளும்

விருப்போடு நோக்குமென்னை அகமகிழ்ந்து ,


உறவுகளையும் கவனித்தேன்

நேரத்தையும்

துச்சமாகக் கடந்து,


மிச்சமாக ஏதும் இல்லை

நோய்களைத் தவிர்ந்து ,


பட்டக்கடன் முடியவில்லை

படித்தே முடித்தார்கள் விரைந்து,


பிள்ளைகள் திறமையில்

குறைவில்லை விளங்குகிறார்கள் சிறந்து ,


விடியலென இணையர்களாக

இணைகிறார்கள்

இல்லம் நிறைத்து,


காலப்போக்கில் 

எங்களையும்

ஒதுக்குகிறார்கள்

மனம் வெறுத்து,


எப்போது திருந்துவார்கள்

தாய் தந்தையரின்

அருமையுணர்ந்து,


முதியோர் இல்லங்களையும்

கூட்டுகிறார்கள் 

பெற்றெடுத்ததை மறந்து...!

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நான் என்னுடைய சுய கணக்கெடுப்பை முடித்து விட்டேன்.. வீடியோ வெளியிட்ட முதல்வர் விஜய்

news

Census: தமிழகத்தில் ஆகஸ்ட் 1 முதல் முதற்கட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு.. ஆன்லைனிலும் சமர்ப்பிக்கலாம்!

news

ரோஹித் சர்மா ஓய்வு பெற நிர்ப்பந்தமா.. உண்மையில் என்னதான் நடக்கிறது?

news

ஜோர்டானில் இருந்த அமெரிக்க போர் விமானங்களை அழித்ததாக ஈரான் அதிரடி தகவல்

news

ரயில் டிக்கெட் முன்பதிவை எளிதாக்க ஐஆர்சிடிசி (IRCTC) புதிய பீட்டா பதிப்பு அறிமுகம்

news

சிந்தனைச் சிதறல்.. தனித்துவமும் தன் மதிப்பும் மிகுந்த தனிமையே உயர்வானது!

news

ரஷ்ய எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா மீது 100% வரி? அமெரிக்க நாடாளுமன்றத்தில் புதிய மசோதா

news

ஓய்வறியா தமிழ்ச் சூரியன்.. தளராமல் தமிழ் வளர்க்கும் பாரதிச்சுடர் நா.வே.நீலகண்டத் தமிழன்!

news

மிஸ்..இந்த வாட்டியும் வந்ததா!.. அஞ்சாப்பு அட்டகாசங்கள்

அதிகம் பார்க்கும் செய்திகள்