தமிழகம் நோக்கி நகரும் புயல்...நவம்பர் 30ம் தேதி சென்னைக்கு ரெட் அலர்ட்

Su.tha Arivalagan
Nov 27, 2025,01:36 PM IST

சென்னை : வங்கடக்கடலில் உருவாகி உள்ள புயல் சின்னமானது தமிழகத்தை நோக்கி நகரும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று 4 மாவட்டங்களிலும், நாளை 5 மாவட்டங்களிலும் மிக அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது. 


தென்மேற்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது வியாழக்கிழமை (நவம்பர் 27, 2025) மாலைக்குள் புயலாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புயல், வட தமிழகம், புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளை நோக்கி சனிக்கிழமை (நவம்பர் 29, 2025) நகரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயல், வியாழக்கிழமை மாலைக்குள் புயலாக வலுப்பெற்று, தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் இலங்கை கடலோரப் பகுதிகளைக் கடந்து, வட தமிழகம், புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளை நோக்கி சனிக்கிழமை நகரும் என கணிக்கப்பட்டுள்ளது. 




தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும் என கணித்துள்ளது. வெள்ளிக்கிழமை (நவம்பர் 28, 2025) முதல் தமிழகம் முழுவதும் படிப்படியாக மழை அதிகரிக்கும் என்றும் தெரிவித்துள்ளது. வெள்ளிக்கிழமை அன்று டெல்டா மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் கனமழை முதல் மிகக் கனமழை வரை பெய்யக்கூடும். சனிக்கிழமை அன்று, வானிலை அமைப்பு வட தமிழகத்தை நோக்கி நகரும்போது, தீவிர மழை வட தமிழக மாவட்டங்களுக்கும் பரவும் என எதிர்பார்க்கப்படுகிறது.


அடுத்த இரண்டு நாட்களுக்கு அதி கனமழையாக பெய்ய வாய்ப்புள்ளது. நவம்பர் 28ம் தேதி தஞ்சை, திருவார6ர், நாகை, புதுக்கோட்டை ஆகிய 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. செங்கோல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் ஆகிய 6 மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்காலில் நவம்பர் 29ம் தேதி அதி கனமழைக்கான ரெட் அலர்ட் வவிடுக்கப்பட்டுள்ளது. நவம்பர் 30ம் தேதி சென்னைக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.