தேடல்!
- க.யாஸ்மின் சிராஜூதீன்
நீ ஓர் தொடர் கதையா...!!!
வாழ்க்கையை ஆக்கிரமித்தாயே
உயிருள்ள வரை....!!!
அன்பு நண்பனா...!!!
உன்னைப்பிரியாமல் இருக்கச் செய்கிறாயே....!!!
அமுதச் சுரபியா...!!!
அள்ள அள்ள குறையவில்லையே...!!!
நீ என்ன ஆசையா....!!!!
அடுத்தடுத்து வருகிறாயே....!!!
நீயும் ஆசையும் போட்ட ஒப்பந்தமா..!!!
எங்களை பம்பரமாய்சுழற்றுகிறாயே.!
நீ என்ன புதையலா...!!!
தோண்டிக்கொண்டே இருக்க வைக்கிறாயே....!!!!
நீ என்ன வேரா...!!!!!
ஊடுருவிக்கொண்டே இருக்கிறாயே..!
நீ என்ன ரகசியமா...!!!
கண்ணாமூச்சி ஆடுகிறாயே...!!
நீ என்ன நண்பனா !!பகைவனா !!! வீரனா !!!வெற்றியா !!
தோல்வியா!!வேகமா!!! கல்வியா!!செல்வமா!! தென்றலா!! புயலா!!
அறிவா!!ஆற்றலா!! பலமா!!பலவீனமா!!சொல்லா!!செயலா!!....
ஆஆஆ..கண்டுபிடித்தேன்...
வாழ்க்கையா....!!!
ஏன் இவ்வளவு ரகசியம்..!!!
ஏன் இத்தனை தேடல்....!!!
வாழ்க்கை வாழ்வதற்கே....
என்பதை உணர்த்துவதற்கா ....!!!
உணர்ந்தேன் தெளிந்தேன்...!!!
நேரம் கனிந்தால் காய் கனியாவதுபோல்...
தேடல் விடையாகும் மீண்டும்
விடுகதையாகும்...!!!
வாழ்க்கை சுழலும் வரை...
தேடலும் சுழலும்தான்...!!!
நம் வாழ்க்கை இன்பமாகும்...!!!
வாழ்க்கையை தேடலில் மறைத்து
வைத்தான் இறைவன் ...
நம் வாழ்க்கையை நாமே வடிவமைக்கவே...சிறந்ததை
தேர்ந்தெடுப்போம் தேடல் தொடரும்....!
(கவிஞர் க.யாஸ்மின் சிராஜூதீன் இடைநிலை ஆசிரியர். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கரடிக்குப்பம். மேல்மலையனூர் ஒன்றியம் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். 26.09.2014 முதல் இடைநிலை ஆசிரியராக 11 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். 2 ஆண்டுகளாக கவிதை, சிந்தனை துளிகள், சிறுகதை, வகுப்பறைக்கு பாடங்கள் தொடர்பான பாடல்கள் எழுதி வருகிறார். பிரதிலிபி தளத்தில் கவிதைகளைப் பதிவிட்டு வருகிறார். தொடுவானம் கவிதை குழுமம் நடத்தும் whatsApp வழியாக கவிதை எழுதும் போட்டியில் தொடர்ந்து கவிதை எழுதி வருகிறார்)