- க.யாஸ்மின் சிராஜீதீன்
பெண்ணின்றி அமையாது உலகு
அவளின்றி மகிழாது வீடு...
பேதை முதல் பேரிளம்பெண் வரை ஏழு பருவங்கள் கொண்டாய்...
உலகை ஏற்றி விடும் ஏணியாய் பிறந்தாய்...
பெண்கள் தடம்பதியாத துறைகள் இல்லை
பெண்ணடிமை வீடுகள் சிறப்படைவதுமில்லை....
அடுப்பூதிய மங்கை இன்று
ஆராய்ச்சிக்கு அன்னை....

நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்டபார்வையும்
சிந்தனையில்
தெளிவும் உனக்கேசொந்தம்...
உன் பாசத்திற்கு விலையில்லை வீரத்திற்கு குறைவில்லை.....
ஏடுதூக்கிப்
படித்தாய்
வரலாற்று ஏட்டில் தடம் பதித்தாய்....
உலகையே திரும்பிப் பார்க்க வைத்த சாதனைப் பெண்கள் ஏராளம்
நாமும் அதில் இருப்போம் என்று உறுதிகொள் வீர மகளே...
சொல்லில் சொல்லி அடக்கி விட முடியாது உந்தன் பெருமையை....
சாதனை படைக்க எழுந்து வா வீர மகளே...
சரித்திரம் படைக்கலாம் வெற்றி நடை போட்டு ஒளிவீசிடலாம் பாரினிலே...
உன்னால் முடியாதது ஏதுமில்லை பெண்ணே!
(கவிஞர் க.யாஸ்மின் சிராஜூதீன் இடைநிலை ஆசிரியர். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கரடிக்குப்பம். மேல்மலையனூர் ஒன்றியம் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். 26.09.2014 முதல் இடைநிலை ஆசிரியராக 11 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். 2 ஆண்டுகளாக கவிதை, சிந்தனை துளிகள், சிறுகதை, வகுப்பறைக்கு பாடங்கள் தொடர்பான பாடல்கள் எழுதி வருகிறார். பிரதிலிபி தளத்தில் கவிதைகளைப் பதிவிட்டு வருகிறார். தொடுவானம் கவிதை குழுமம் நடத்தும் whatsApp வழியாக கவிதை எழுதும் போட்டியில் தொடர்ந்து கவிதை எழுதி வருகிறார்)
Butterflies weren't born with wings
Think Less, Live More
I AM THE HERO
WHERE TRUST LIVES....
மதுரை அரசாளும்.. மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்.. 17 ஆண்டுகளுக்குப் பிறகு!
பட்டினப்பாக்கத்தில் தலைமை செயலகம் கட்டினால்...என்ன அதிமுக ஜெயக்குமார் இப்படி சொல்லிட்டார்?
சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப்பெட்டியில் தேங்காய் வைத்து பூஜை...இது நடக்க போவது உறுதியா?
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல்: திமுக முப்பெரும் விழா ஒத்திவைப்பு!
முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: சேகர்பாபு, ஆ.ராசா மீது வழக்குப்பதிவு
{{comments.comment}}