நிலையாமை!
- பா.பானுமதி
நிலையாமை என்பது நிர்மலமான அழகு
நிற்பதற்கு இணையாக ஏதுமில்லை
நினைவில் வைத்து பழகு
இருந்தால் அருமை
இல்லாவிட்டாலும் அருமை
இதை அழகாக சொல்வதே
திருக்குறளின் வளமை
நல்லார் இருப்பதே பெருமை
அல்லார் இல்லாத இருப்பதே பெருமை
நேற்று இருந்தார்
இன்று இல்லை என்பது நிதர்சனம்
இன்று இருப்பார்
நாளை இல்லை என்பது எதார்த்தம்
நாளை என்பது நமக்கு வருமா என்பது
நிலையாமையில் நாதம்
இரக்கம் உள்ளவர்கள் இருப்பதே இதம்
இரக்கமற்றவர்கள் இல்லாது இருப்பதே பதம்
இருப்பதும் இல்லாத இறப்பதும்
இலை மறை காய்யாய் சொல்லுவதே வேதம்
உலகில் உதித்த உயிர்கள் அனைத்தையும்
நிலையாமை நித்தம் தொடரும்
அலையாமையால் பேராசையின் விழையாமையால்
விழித்திருந்தால் சுத்தம் படரும்
நிலையாமை நீர்த்துப் போகவும் செய்யும்
கணத்தில் வேர்த்து போக செய்யும்
பார்வை பொருத்து பலது பெய்யும்
நிலையாமை புரிந்தால் நெஞ்சம் நெகிழும்
பற்றின்மை திகழும்
நிம்மதி நிலைக்க அமைதி தழைக்க
நிலையாமை புரிய முயற்சி செய்