அரச மர நிழலை நம்பி.. நான்கு பறவைகள்!

Su.tha Arivalagan
Nov 19, 2025,02:44 PM IST

- J.லீலாவதி


ஆண்கள் தின நல்வாழ்த்துக்கள். 

என் தந்தை. 

தன்னைத் தேடி ஒரு பயணம். 

அழகான கிராமத்தில் அரச மரம். 

அந்த அரச மர நிழலை நம்பி 

நான்கு பறவைகள் 

அழகாய் வாழ்ந்த நாட்கள்.

இரைதேட சென்ற

ஆண் பறவை திரும்பவில்லை. 

ஆலமரமும் சாய்ந்தது. 

வேரின் பிடியின்றி 

விழுந்து விட்டன அந்த மூன்று பறவைகள். 

அதில் விழுந்த நான் என்னை தேடினேன். 




காணவில்லை என்னை. 

நடந்தேன் கண்ணெதிரே

ஆயிரம் மரங்கள் 

அதில் எதுவும் நான் தேடியது இல்லை. 

அந்த மரத்தில் நிழலில்லை. 

கனியும் சுவையில்லை. ஏன்?.

நான் தேடிய மரம் அது அல்ல. 

அதே மரத்தின் நிழலை தேடி அலைகிறேன். 

என்றோ ஒரு நாள் கிடைத்து விடாதா!.

தேடுகிறேன் தேடிக் கொண்டிருக்கிறேன். 

எத்தனை மரங்கள் இருந்தாலும். 

அந்த மரத்தின் சுவையும் 

அந்த மரத்தின் நிழலும் 

என்றோ ஒரு நாள் கிடைத்து விடாதா!.

தேடுகிறேன் தேடிக் கொண்டிருக்கிறேன். 

இதில் என்னையும் சேர்த்து தேடுகிறேன் 

தேடிக் கொண்டிருக்கிறேன்


(J.லீலாவதி, திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையம் மற்றும் தென்தமிழ் இணையதளம் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தில் இடம் பெற்று எழுதி வருகிறார்)