குடும்பங்களைத் தூணாக தாங்கும் ஆண்கள்!
- அ.சீ.லாவண்யா
ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 19 ஆம் தேதி சர்வதேச ஆண்கள் நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இது ஆண்களின் சமூகப் பங்களிப்பை நினைவுகூரவும், அவர்களின் நலன், மனநலம், குடும்பப் பொறுப்புகள் போன்றவற்றை குறித்து பேசவும் முக்கியமான ஒரு நாளாகும்.
இன்றைய காலத்தில் ஆண்களுக்கும் மன அழுத்தம், பொறுப்பின் சுமை, வேலை அழுத்தம், குடும்பப் பாதுகாப்பு போன்ற சவால்கள் அதிகம். இருப்பினும், பல நேரங்களில் ஆண்களின் மனநிலை குறித்து பேசுவதற்கும் கவனிப்பதற்கும் இடமில்லை. அதனால்தான் ஆண்கள் நாள் மிகவும் முக்கியமானது.
குடும்பங்களில் ஒரு ஆண் என்பவர் அந்த வீட்டின் கட்டை விரல் போலாவார். எப்படி நம் கைகளில் ஐந்து விரல்களில் கட்டை விரல் இருந்தால் தான் பணி செய்ய முடியுமோ அதே போலவே ஒரு வீட்டில் ஆண் இருந்தால் மட்டுமே அந்த வீட்டின் வேலைகள் மட்டும் இல்லாமல் அந்த வீட்டின் தலைமையாக திகழ்பவரும் ஆண் தான். இந்நாளில் அத்தகைய சிறப்பு வாய்ந்த குடும்பத்தின் தூணாக விளங்கும் ஆண்களை போற்றுவோம்.
ஒரு ஆணாக இருப்பது அவ்வளவு எளிதல்ல தன் குடும்பத்திற்கு உழைக்க வேண்டும் என்பதற்க்கே அவன் முதலில் அவரது சுதந்திரத்தை இழக்கிறான். உண்மையாக சொல்ல வேண்டும் என்றால் இக்காலகட்டத்தில் ஒரு ஆணிடம் நாம் உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டால் அவர் முதலில் சொல்வது என் குடும்பத்தை பார்த்துக்க வேண்டும் என்பதே. ஆனால் அந்த குடும்பத்தை வழி நடத்த அவன் முதலில் அவன் விழியில் இருக்கும் தூக்கத்தை இழக்கிறான். பிறகு அவன் தன்னிடம் உள்ள மகிழ்ச்சிகளை இழக்கிறான் காரணம், குடும்பத்தின் மகிழ்ச்சியே அவனின் மகிழ்ச்சியாக கருதுகிறான்.
ஒரு குடும்பத்தில் தலைவனாக திகழ்வது மட்டும் இல்லாமல் காக்கும் காவல் தெய்வமாகவும் ஒரு ஆண் இருக்கிறான்.
ஒவ்வொரு உறவின் பின்னாலும் அமைதியாக நிற்கும் ஆதரவாகவும் இருக்கிறார்கள். தந்தை, சகோதரன், நண்பன், கணவன், ஆசிரியர் என பல பரிமாணங்களில் ஆண்கள் சமுதாயத்திற்கு தங்கள் சேவை மற்றும் ஆதரவை வழங்குகின்றனர். அவர்களின் உழைப்பு பல நேரங்களில் வெளிப்படையாக பாராட்டப்படாமல் போனாலும், அவர்கள் silently society-க்கு பலம் சேர்க்கின்றனர்.
ஆண்கள் நாள், ஆண்களை உயர்த்தி மதிப்பதற்கான நாள் மட்டுமல்ல; அவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை புரிந்துகொண்டு அவர்களுக்கு மனஉறுதி அளிக்கும் நாள்.
முடிவாக, ஆண் என்றதும் இரும்பு மனம் என்ற பல தவறான நம்பிக்கைகளை உடைத்து, ஆண்களும் காதலும் கருணையும் நெகிழ்ச்சியும் கொண்ட மனிதர்கள் என்பதை புரிய வேண்டிய நேரம் இது. அனைவரும் ஒன்றிணைந்து ஆண்களை மதித்து, அவர்களின் நலனை காக்க வேண்டும்.
நம்மை காக்கும் தூண்களாம்
நம் பாதுகாப்பின் அடையாளமாம்
தன் பின்னால் இருக்கும் சந்தோசத்தை மறைப்பவர்
குடும்பத்தின் மகிழ்ச்சியே என்று அவர்கள் முகத்தில் வரும் ஆனந்தத்தில் பார்த்து சிரிப்பவர்.
இப்படி பல சிறப்புகளை தன்னுள் மறைத்து வைத்திருப்பவர் ஆண். அந்த உலகதத்தின் வலிமையை கொண்டாடும் நாளில் அனைத்து ஆண்களுக்கும் எங்களது நெஞ்சார்ந்த நன்றிகள்.
இன்று அவரை நினைக்கும் நாளாம், அவரின் அமைதியை கேட்கும் நாளாம், அவரின் பலத்துக்கு நன்றி கூறும் நாளாம்
இனிய சர்வதேச ஆண்கள் தின நல்வாழ்த்துக்கள்!
(அ.சீ. லாவண்யா, திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையம் மற்றும் தென்தமிழ் இணையதளம் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தில் இடம் பெற்று எழுதி வருகிறார்)