இன்னிக்கு என்ன நாள் தெரியுமா.. சர்வதேச ஆண்கள் தினம்..!

Nov 19, 2025,12:22 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


சர்வதேச ஆண்கள் தினம் (IMD)-International Men's Day..  2025 நவம்பர் 19ஆம் தேதி புதன்கிழமை சர்வதேச ஆண்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. ஆண்களின் சாதனைகள் மற்றும் அவர்களுடைய பங்களிப்புகளை கொண்டாடும் வகையில் இந்த நாள் சர்வதேச ஆண்கள் தினமாக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.


இந்த நாள் 1992 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. டிரினிடா டியன் அறிஞர் டாக்டர் ஜெரோம் டீலக் சிங், இந்த நாளை ஆண்கள் தினமாக பரிந்துரை செய்தார். ஆண்களின் ஆரோக்கியம், நேர்மறையான ஆண்  முன்மாதிரிகளின்  முக்கியத்துவம், ஒவ்வொரு துறையிலும் ஆண்களின் சாதனைகள் மற்றும் பங்களிப்புகள் ஆகியவற்றை கொண்டாடும் வகையில் இந்த நாள் கொண்டாடப்படுகிறது. டாக்டர் ஜெரோம் அவர்களின் யோசனை விரைவாக உலக அளவில் பிரதிபலித்து, பல்வேறு நாடுகளில் ஆண்கள் தின கொண்டாட்டங்கள், விவாதங்கள் மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மூலம் இந்த நாளுக்கான  அணுசரிப்பை  ஏற்றுக்கொண்டன.


சர்வதேச ஆண்கள் தினத்தின் முக்கியத்துவம் யாதெனில் ஆண்கள் சமூகத்தில் ஏற்படுத்தும் நேர்மறையான தாக்கத்தை கொண்டாடுவதே ஆகும். அதே நேரத்தில் அவர்களின் நல் வாழ்வை வலியுறுத்துகிறது.




" சிவன் இல்லையேல் சக்தி இல்லை,சக்தி இல்லையேல் சிவன் இல்லை ".

 "ஒவ்வொரு ஆண் சாதனையாளருக்கு பின்னும் ஒரு பெண் இருக்கிறாள் என்பது போலவே ஒவ்வொரு பெண் சாதனையாளருக்கு பின்னும் ஒரு சிறந்த ஆண்மகன் இருக்கிறார் ".

 

சர்வதேச ஆண்கள் தினம் 20 25 கருப்பொருள்:


"ஆண்கள் மற்றும் சிறுவர்களை கொண்டாடுங்கள்"- ".Celebrating Men and Boys"


இந்த கருப்பொருள் உணர்த்துவது யாதெனில் ஆண்களும், சிறுவர்களும் குடும்பம்,சமூகம் மற்றும் அவரவர் வேலையில் அளிக்கும் நேர்மறையான பங்களிப்புகளுக்கு அவர்களை கொண்டாடும் வகையில் அவர்களின் நேர்மறையான பங்களிப்புகளுக்கு அவர்களுக்கு மதிப்பு அளித்து கொண்டாடுவது ஆகும். ஆண்களின் நல்வாழ்வு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் மற்றும் நேர்மறையான முன்மாதிரிகளை முன்னிலைப்படுத்துவதுமே இதன் குறிக்கோள் ஆகும்.


இருப்பினும் சர்வதேச ஆண்கள் தினம், சர்வதேச மகளிர் தினத்தை(March8 )போல் இன்னும் பிரபலம் அடையவில்லை என்றே  கூறலாம். இந்திய ஆண்கள் நல அமைப்பு 2007ம் ஆண்டு முதல் இந்தியாவில் சர்வதேச ஆண்கள் தினத்தை கொண்டாட துவங்கியது. இதன் தொடர்ச்சியாக 2009 ஆம் ஆண்டு சட்டபூர்வமாக அங்கீகாரம் பெற்றது.


ஆண்கள் தினத்தின் நோக்கங்கள் -


ஆண்களின் முன்னேற்றத்தை ஊக்குவித்தல்:

எல்லா இடங்களிலும் சினிமா துறையினரையோ விளையாட்டு துறையினரையோ, ரோல் மாடலாக காட்டாமல் அன்றாடம் நாம் சந்திக்கும் நம் குடும்பத்தில் இருக்கும் ஆண்களை 'ரோல் மாடலாக 'ஊக்குவித்தல் சிறப்பு.

ஆண்களின் உடல்நலம் பேணுதல் :

ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆணிவேர்  ஆண்கள். அத்தகைய ஆண்களை சிறப்பித்து பாதுகாக்க வேண்டும். அவர்களுக்கு அடிப்படை மருத்துவ பரிசோதனைகள் உட்படுத்தப்பட வேண்டும்.

ஆண்களை கொண்டாடுங்கள் :

குடும்பம்,சமுதாயம், சுற்றுச்சூழல் என அனைத்து இடங்களிலும் நேர்மறையான பங்களிப்பை அளித்து வரும் ஆண்களை கௌரவித்து  கொண்டாட வேண்டும்.


உயிரை சுமக்கும் பெண்மையை போற்றும் நாம் ஆயுள் முழுவதும் குடும்பத்தை சுமக்கும் ஆண்களை கௌரவிக்க வேண்டும்.

" ஆண் "என்பதே" அற்புதம்" குடும்பத்திற்காக தன்னை உருக்கி எரியும் மெழுகுவர்த்திகளாக ஒளி தரும் ஆண்களை போற்றுவோம். தந்தையாக, சகோதரனாக, கணவனாக,மகனாக, மாமனாக, பாட்டனாக, தாயுமானவனாக விளங்கும் ஆண்களுக்கு இனிய ஆண்கள் தின நல்வாழ்த்துக்கள்.


ஆசானாக...! தந்தையாக..! சகோதரனாக...! தோழனாக...!காதலனாக...! கணவனாக...! மகனாக..! ஆண் அவனுக்காக வாழ்பவன் அல்ல அவனையே அர்ப்பணித்து வாழ்பவன். குடும்பத்திற்காக தன் வாழ்நாள் முழுவதும் கஷ்டப்படுபவன் ஆண். எண்ணில் அடங்கா கஷ்டங்களை நெஞ்சில் சுமப்பவனும் ஆண்.


சட்டென பெண் அழுது விடுவாள். ஆனால்.. மனதினுள் அழுது தன் கண்ணீரை வெளிப்படுத்தாமல் மனதை திடமாக வைத்திருப்பவன் ஆண். ஏனெனில், தன் கண்ணீரால்  மற்றவர்கள் கலங்கி  விடக்கூடாது என்று  நினைப்பவன் ஆண்.


ஆண்கள் தினத்தில் இன்று அனைத்து ஆண்களையும் போற்றி, நன்றி கூறி, கௌரவிப்போமாக. அனைவருக்கும் ஆண்கள் தின நல்வாழ்த்துக்கள். தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன்.வரைந்து எழுதியவர் உங்கள்  ஸ்வர்ணலட்சுமி.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

International Men's day: பெண்கள் நாட்டின் கண்கள்.. ஆண்கள் வீட்டின் தூண்கள்!

news

சபரிமலையில் குவியும் ஐயப்ப பக்தர்கள்.. தேசிய பேரிடர் மீட்புக் குழுவும் வருகை!

news

குடும்பங்களைத் தூணாக தாங்கும் ஆண்கள்!

news

மதுரை, கோவை மெட்ரோ திட்டம் வராதா.. கவலையில் மக்கள்.. கேள்விக் கனை தொடுக்கும் எம்.பிக்கள்

news

இன்னிக்கு என்ன நாள் தெரியுமா.. சர்வதேச ஆண்கள் தினம்..!

news

அதிரடி சரவெடியென உயர்ந்தது தங்கம் விலை... இன்று சவரனுக்கு ரூ.800 உயர்வு

news

மீண்டும் பீகார் முதல்வராகிறார் நிதீஷ் குமார்.. இன்று தேஜகூ சட்டமன்ற தலைவராக தேர்வாகிறார்

news

ஊரெல்லாம் உன்னைக் கண்டு.. நயன்தாராவுக்கு.. விக்கி அளித்த பர்த்டே கிப்ட் என்ன தெரியுமா??

news

வானம் அருளும் மழைத்துளியே!

அதிகம் பார்க்கும் செய்திகள்