- க. யாஸ்மின் சிராஜூதீன்
தொழிலாளர் தினமாம் மே ஒன்று
பல இன்னல்களுக்குப்பின் கிடைத்த கற்கண்டு....
சிங்காரவேலர் கொண்டாடிய தொழிலாளர் தினம்
மெரினா கடற்கரையிலே கம்பீரமான நினைவிடம்....
தொழிலாளி இல்லாத
துறையில்லை
தொழிலாளி இல்லாமல்
உலகில்லை......
செய்யும் தொழிலே தெய்வம்
தொழிலாளியே அச்சாணி...

தொழிலில் ஏற்றத்தாழ்வு இல்லை
தேவைப்படும் போது
தேடப்படுவார்கள்...
தொழிலாளியின் வியர்வை காயுமுன்னே
ஊதியம் அளித்திட வேண்டும்...
ஒருவரின் பொழுதுபோக்கு செலவு
மற்றொருவரின் வீட்டுச்செலவு....
மனிதனை மனிதன் மதிக்க வேண்டும்
உழைப்பினை ஊக்கப்படுத்திட வேண்டும்....
தொழிலாளர் தினம்
தொழிலாளர்களுக்கு கிடைத்த வரம்.....
தடையினை உடைத்திடு
உழைப்பினை அளித்திடு...
சிகரம் தொட்டு சிறகை விரித்து பறந்திடு ....
செய்யும் தொழிலை
வணங்கிடுவோம்
தேசம் சிறக்க வாழ்ந்திடுவோம்...
(கவிஞர் க.யாஸ்மின் சிராஜூதீன் இடைநிலை ஆசிரியர். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கரடிக்குப்பம். மேல்மலையனூர் ஒன்றியம் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். 26.09.2014 முதல் இடைநிலை ஆசிரியராக 11 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். 2 ஆண்டுகளாக கவிதை, சிந்தனை துளிகள், சிறுகதை, வகுப்பறைக்கு பாடங்கள் தொடர்பான பாடல்கள் எழுதி வருகிறார். பிரதிலிபி தளத்தில் கவிதைகளைப் பதிவிட்டு வருகிறார். தொடுவானம் கவிதை குழுமம் நடத்தும் whatsApp வழியாக கவிதை எழுதும் போட்டியில் தொடர்ந்து கவிதை எழுதி வருகிறார்)
தமிழ்நாட்டில் மழை தொடரும்.. நாளை 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச்.. 25 மாவட்டங்களுக்கு எல்லோ அலர்ட்!
யோசிக்க வேண்டிய விஷயம் தான்...!
மரமா பாறையா!
தூத்துக்குடி முத்து போல!
How Can We Motivate Children to Discover Their Skills?
World Food Day: ஒவ்வொரு பருக்கை உணவும் முக்கியம்.. வீணடிக்காதீர்கள்!
கருவறைப் பூக்கள்
எதிர்கால தலைமுறைக்கு பசுமை நிறைந்த உலகை விட்டு செல்வோம்!
World Food day: மனிதா, பிறருக்கு உணவளித்துப் பார்!
{{comments.comment}}