- வே.ஜெயந்தி
இந்தியப் பெண் பச்சேந்திரி பால் என்பவர் 1984 ஆம் ஆண்டு மே 23 அன்று எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் இந்தியப் பெண் என்ற பெருமையை பெற்றார்.
இமயமலை போன்ற உயரங்களை வெல்வது எளிதல்ல; ஆனால் உறுதியான சிகரம் போன்ற மனவலிமை இருந்தால் எதையும் சாதிக்க முடியும் என்பதை அவர் நிரூபித்தார்.
உயரமான சிகரமென்று எவரும் பயப்படாமல், தன்னம்பிக்கையுடன் முயன்றால் வெற்றி நிச்சயம் என்பதை அவரது சாதனை உணர்த்துகிறது. காற்று, பனி, கடும் குளிர் போன்ற சவால்களை தாண்டியும், மனத்தின் மகத்துவம் தான் மனிதனை உயரத்திற்கு கொண்டு செல்கிறது என்பதை அவர் காட்டியுள்ளார்.

பணிக்காலத்தில் பெற்ற அனுபவங்கள், ஆன்மபலமும் மன உறுதியும், பல்வேறு களங்களில் அவர் காட்டிய திறமையும் அவரது வெற்றியின் அடித்தளமாக அமைந்தன. அவரது சாதனைக்கு இந்திய அரசு உயரிய விருதுகளை வழங்கி கௌரவித்தது.
பச்சேந்திரி பாலா அவர்களின் வாழ்க்கைப் பயணம் ஒரு மலையை வென்ற கதை மட்டுமல்ல; பெண்களின் மனவலிமை எந்த உயரத்தையும் தொட முடியும் என்பதற்கான உயிர் சான்றாகும்.
வாழ்க்கையில் சவால்கள் வந்தாலும் தன்னம்பிக்கை, கட்டுப்பாடு, கடின உழைப்பு ஆகியவை இருந்தால் எவரெஸ்ட் போன்ற உயரங்களும் அடையக்கூடியவை என்பதை அவரது பயணம் நமக்கு கற்றுத் தருகிறது.
இன்றைய இளம் தலைமுறைக்கு, குறிப்பாக மாணவ-மாணவிகளுக்கு, “கனவு காணுங்கள்; அதற்காக முயற்சி செய்யுங்கள்; தோல்வியை பயப்படாதீர்கள்” என்ற ஒரு மௌனப் பாடமாக அவரது வாழ்க்கை திகழ்கிறது.
உயரங்களை அடைய விரும்பும் ஒவ்வொரு மனதிற்கும் அவர் ஒரு விளக்குக் குயிலாக விளங்குகிறார்.
“உயரம் என்பது மலையின் உயரம் அல்ல;
மனத்தின் உயரம்தான் உண்மையான வெற்றி.”
(About the Author: V. JAYANTHI , Graduate teacher, Chengalpattu district)
அமைச்சர் ஆனந்த் முன்னிலையில்.. தவெகவில் இணைந்த கடம்பூர் ராஜு, உடுமலை ராதாகிருஷ்ணன், மு.சி. சம்பத்
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026: இந்திய அணியில் சூர்யவன்ஷி.. ஷ்ரேயாஸ் ஐயர் கேப்டன்!
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது.. திருக்குறள் கதைகள்
Classical Tamil: செம்மொழியாகிய தமிழ் மொழியே!
Tamil Poem: மன(தின்)வலி
Tamil Short Story: மக்களின் மனம்!
வீரம் வெளஞ்ச மண்ணு!
ஜூன் ஆறு வந்தது சிறப்பு நாளே !
Tamil Poem: பூவே பொன்பூவே
{{comments.comment}}