நான் வீழ்வேனென்று நினைத்தாயோ? – ஒரு புதுமைப் பெண்ணின் வெற்றிச் சாட்சியம்

Mar 02, 2026,03:26 PM IST

- டாக்டர் கோ. லதா


"தேவனால் தள்ளப்பட்ட கல், மூலைக்குத் தலைக்கல்லாயிற்று" என்ற வேதவாக்கிற்கு இணங்க, சோதனைகளைச் சாதனைகளாக்கி நிமிர்ந்து நிற்கும் ஒரு பெண்ணின் போராட்டமே இந்த வரலாறு. பாரதி கண்ட புதுமைப் பெண்ணாய், வீழ்ச்சிகளை ஏணிகளாக்கி இன்று வெற்றியின் சிகரத்தில் ஒரு சாட்சியாய் நிற்கிறேன்.


ஒரு இந்துக் குடும்பத்தில் பிறந்து, இயேசு கிறிஸ்துவை என் இரட்சகராக ஏற்றுக்கொண்டபோது, என் குடும்பத்தாரால் நான் புறக்கணிக்கப்பட்டேன். ஒதுக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டு, "ஆகாது" என்று தள்ளப்பட்ட நிலையில் என் பயணம் தொடங்கியது. ஆனால், கடந்த 27 ஆண்டுகளில் என் சுய உழைப்பு, ஞானம் மற்றும் இறைவனின் வழிநடத்துதலால் நான் கண்ட உயர்வுகள் அசாத்தியமானவை:


வீடற்றவளாய் நின்ற எனக்கு இன்று சொந்தமாக ஓர் இல்லம் உண்டு. தனிமையைச் சாதகமாக்கி என்னைச் சபையை விட்டு வெளியேற்ற முயன்றவர்களுக்கு மத்தியில், இறைவனுக்காக ஒரு தேவாலயத்தையே கட்டி எழுப்பியுள்ளேன்.




தமிழக அரசின் உயரிய விருது உட்பட 20-க்கும் மேற்பட்ட விருதுகள், 24 தனிநபர் உலக சாதனைகள் என என் பட்டியல் நீள்கிறது. உலகச் செந்தமிழ்க் சங்கத்தின் நிறுவனராக, திருக்குறள் மற்றும் ஹைக்கூ கவிதைகளில் உலக சாதனைகளை நிகழ்த்தியுள்ளேன். மூன்று தனி நூல்களையும், நான்கு தொகுப்பு நூல்களையும் வெளியிட்டுத் தமிழ்ப் பணியில் தடம் பதித்துள்ளேன்.


பணி செய்யும் இடத்திலும் திறமையின் காரணமாகப் பல கருத்து வேறுபாடுகளையும், காரணமற்ற பகையையும் சந்தித்தேன். இருப்பினும், என் மாணவர்களை உலக சாதனையாளர்களாக்கி, 450-க்கும் மேற்பட்ட சான்றிதழ்களை என் சொந்தச் செலவில் அவர்களுக்குப் பெற்றுத்தந்துள்ளேன். இன்று என் மேலதிகாரிகளின் நட்பும், நான் பெற்ற உயரிய அங்கீகாரங்களும் என்னைத் தள்ளியவர்களை வெட்கப்பட வைத்திருக்கின்றன.


பாரதி கண்ட புதுமைப் பெண்ணாக நான் இன்று தலைநிமிர்ந்து நிற்கிறேன். குடும்பம், வேலை, ஊழியம் என ஒவ்வொரு தளத்திலும் "வீழ்வாள்" என்று நினைத்தவர்களுக்கு மத்தியில், தேவனுடைய கரம் என்னைத் தாங்கிப் பிடித்தது.


"நான் வீழ்வேனென்று நினைத்தாயோ? நான் விழவில்லை, நிமிர்ந்து நிற்கிறேன்."


பாரதி மரிக்கவில்லை; அவர் கண்ட கனவுகள் என்னைப் போன்ற எண்ணற்ற பெண்கள் வழியாக இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. என் பிறப்பு ஒரு சாதாரணச் சம்பவமாக இருக்கலாம், ஆனால் என் வாழ்வும் இறப்பும் ஒரு சரித்திரமாக இருக்கும் என்பதே என் உறுதிமொழி.


வாழ்க பாரதி!  ஓங்குக பாரதியின் புகழ்!!.....


(பாரத் சேவா ரத்னா. டாக்டர். கோ. லதா,  கல்வித் தூதர், பன்முக உலக சாதனையாளர், தமிழக அரசின் நல்லாசிரியர் விருதாளர்,  சென்னை)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

செம்மொழியான தமிழ் மொழியே

news

தாங்கி பிடிக்க தாயும் தூக்கி நிறுத்த தந்தையும் இருந்தால்!

news

இயற்கை நீதி!

news

பால் முதல் மின்சாரம் வரை...110 விதியின் கீழ் முதல்வர் விஜய் இன்று வெளியிட்ட 6 அறிவிப்புக்கள்

news

ஒரே நாளில் மதுவிலக்கு கொண்டு வர முடியும்...அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேச்சால் அதிர்ந்த சட்டசபை

news

மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய அறிவிப்புகள்: இலவச ஸ்கூட்டர், பஸ்களில் இலவச பயணத் திட்டம்

news

கொளத்தூர் தேர்தல் வழக்கு: தீர்ப்பை தள்ளிவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

news

டாஸ்மாக் ஊழியர்களுக்கு குட் நியூஸ்...சம்பள உயர்வு, தீபாவளி முன்பணம் அறிவிப்பு

news

சட்டசபையில் காங்கிரஸ் எம்எல்ஏ.,க்கள் இருக்கை மாற்றம்...மாணிக்க தாகூர் சொன்ன பதில்

அதிகம் பார்க்கும் செய்திகள்