- மயிலாடுதுறை வீ.யோகாஸ்ரீ
சேவை செய்வதே உயர்ந்த பண்பு”என்பதை பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் இன்றைய நாளை சிறப்பாக கொண்டாடுவோம்.
சேவைகளை யார் செய்ய வேண்டும்? என்று சந்தேகம் உள்ளதா ?

தன்னலம் கருதாமல் பொதுநலமாக சிந்திக்கும் ஒவ்வொரு மனிதர்களும் தன்னார்வலர்கள் தான். இப்படி சிறப்பு வாய்ந்த தன்னார்வர்களை இணைத்து அமைப்புகளை நடத்தும் நிறுவனர்களை சிறப்பிக்க தான் இன்றைய தினத்தை உலக தன்னார்வலர் அமைப்புகள் தினமாகக் கொண்டாடுகிறோம்.
உலக தன்னார்வ அமைப்புகள் தினம் என்பது சேவை, தியாகம், மனிதநேயம் ஆகியவற்றை முன்னிறுத்தும் ஒரு முக்கியமான தினமாகும்.
உலக தன்னார்வ அமைப்புகள் தினம் ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி 27 அன்று கொண்டாடப்படுகிறது. இந்த நாள், உலகம் முழுவதும் செயல்படும் Non-Governmental Organizations (NGOs) எனப்படும் தன்னார்வ அமைப்புகளின் சேவையை பாராட்டவும், அவர்களின் பங்களிப்பை மக்களிடம் எடுத்துச் சொல்லவும் உருவாக்கப்பட்டது.
உலக தன்னார்வ அமைப்புகள் தினம் முதன்முதலில் 2010 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. 2014 ஆம் ஆண்டு முதல் பல நாடுகளில் அதிகாரப்பூர்வமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தின் நோக்கம், சமூக மாற்றத்தில் என்ஜிஓக்களின் முக்கிய பங்கு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதாகும்.
சமூக சேவையை ஊக்குவிக்கும் வகையில் ஏழை, ஆதரவற்றோர், நோயாளிகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு போன்ற துறைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார்கள்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கல்வி, சுகாதாரம் போன்ற துறைகளில் செயல்படும் அமைப்புகளுக்கு ஆதரவு அளிக்கிறார்கள். இளைஞர்களை தன்னார்வ சேவையில் ஈடுபட தூண்டுகிறார்கள்.
தன்னார்வ அமைப்புகளின் செயல்கள் :
கல்வி படிப்பதற்கு வசதி இல்லாமல் இருக்கும் ஏழை மக்களுக்கு இலவச கல்வி வழங்குதல், பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பொது மக்களுக்கு சுகாதார வசதிகளை அளிக்கும் வகையில் முகாம்கள் அமைத்து பல்வேறு நோய்களை தீர்ப்பதற்கு மருத்துவ முகாம் நடத்துதல், மழை வளம் பெறுவதற்காகவும்,மண்வளத்தை காப்பதற்கும் ,நிலத்தடி நீரை சேமிப்பதற்கும் மரம் நடுதல்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு நமது கடமை என்பதை வலியுறுத்தி நெகிழிப் பைகளை ஒழிப்பதும் துணிப்பைகளை பயன்படுத்துவதும் சார்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு நலம் கருதி அவர்களுக்கு இலவசமாக தற்காப்பு கலைகள் மற்றும் பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்தி தருதல், குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள் ஏற்படுத்தி தருதல்.
உலகளாவிய தன்னார்வ அமைப்புகள்:
UNICEF – குழந்தைகள் நலனுக்காகச் செயல்படும் அமைப்பு
Red Cross – அவசர உதவி மற்றும் பேரிடர் நிவாரணம்
Greenpeace – சுற்றுச்சூழல் பாதுகாப்பு
இந்தியாவில் தன்னார்வ அமைப்புகள்:

இந்தியாவில் ஆயிரக்கணக்கான NGO-கள் கல்வி, சுகாதாரம், பெண்கள் நலன், கிராம வளர்ச்சி போன்ற துறைகளில் பணியாற்றுகிறார்கள்.
Goonj – உடைகள் மற்றும் அடிப்படை தேவைகள் வழங்குதல்
CRY – குழந்தைகள் உரிமைக்காக செயல்படும் அமைப்பு
நமது குழந்தைகளுடன் இணைந்து தன்னார்வலராக செயல்படுவோம் என்று உறுதிமொழி எடுத்துக் கொள்வோம். இந்த நேரத்தில்
நான் கலந்து கொண்ட தன்னார்வலர் அமைப்புகளான விதையால் ஆயுதம் செய் ,தஞ்சாவூர், EWET குழு, தஞ்சாவூர், காவிரி தூய்மை குழு,கும்பகோணம் , B2R பவுண்டேஷன், தமிழ்நாடு, தமிழ்நாடு வனத்துறையுடன் இணைந்து பறவைகள் கணக்கெடுத்தல் நிகழ்வு,தஞ்சாவூர், வனம் தன்னார்வலர் அமைப்பு,திருவாரூர் , மருதம் கூட்டமைப்பு, கும்பகோணம் , பூம்புகார் பனை அறக்கட்டளை ,மயிலாடுதுறை , தடம் பதிக்கும் தளிர்கள்,திருவண்ணாமலை ஆகியவற்றுக்கு நன்றி சொல்ல விழைகிறேன்.
நீங்களும் உங்கள் மாவட்டத்தில் உள்ள தன்னார்வலர் அமைப்புகளுடன் இணைந்து செயல்படுங்கள். நமது குழந்தைகள் நாட்டின் எதிர்காலத்திற்கு பொறுப்பு என்பதை உணர்த்தி தன்னார்வலராக செயல்பட பழக்கப்படுத்திக் கொள்ளுவோம் என உறுதிமொழி எடுத்துக் கொள்வோம்.
பால் முதல் மின்சாரம் வரை...110 விதியின் கீழ் முதல்வர் விஜய் இன்று வெளியிட்ட 6 அறிவிப்புக்கள்
ஒரே நாளில் மதுவிலக்கு கொண்டு வர முடியும்...அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேச்சால் அதிர்ந்த சட்டசபை
மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய அறிவிப்புகள்: இலவச ஸ்கூட்டர், பஸ்களில் இலவச பயணத் திட்டம்
கொளத்தூர் தேர்தல் வழக்கு: தீர்ப்பை தள்ளிவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
டாஸ்மாக் ஊழியர்களுக்கு குட் நியூஸ்...சம்பள உயர்வு, தீபாவளி முன்பணம் அறிவிப்பு
சட்டசபையில் காங்கிரஸ் எம்எல்ஏ.,க்கள் இருக்கை மாற்றம்...மாணிக்க தாகூர் சொன்ன பதில்
நேபாள பெருவெள்ளம்: 903 பேர் பலி; 4,247 பேர் மாயம்...அதிகாரப்பூர்வ அறிவிப்பு
தி.மு.க-வில் இருந்து முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் விலகல்
அரசு ஊழியர்கள் கையில் வைத்திருக்கும் ரொக்கப் பணம்: கன்னியாகுமரி கலெக்டர் அதிரடி உத்தரவு
{{comments.comment}}