1975ல் நான் பட்டப்படிப்பு முடித்த பிறகு சிங்காரச் சென்னையை நோக்கி வேலை தேடி வந்தேன். என் இளவல் காஞ்சீபுரம் பச்சையப்பன் உயர்நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பில் 593/600க்கு வாங்கினான். பிறகென்ன அவனையும் சென்னையில் கல்லூரியில் சேர்க்க வேண்டும்.
நாங்கள் எங்களுடைய மாமா வீடான மேற்கு மாம்பலத்தில் வாசம். ஜூன் மாதம் எஸ்.எஸ். எல். சி ரிசல்ட் வந்ததும், சென்னையி்ல் உள்ள மூன்று கல்லூரிகளில் பி.யூ.சி சேர விண்ணப்பம் வாங்க நான் தான் சென்றேன். கையில் ரூ100 நோட்டு ஒன்றும், ரூ10/_ நோட்டுடன் கிளம்பினேன்.
மாம்பலத்திலிருந்து மீனம்பாக்கம், ரயில் டிக்கட் 40பைசா,பி.யூ.சி .ஏ.எம்.ஜெயின் கல்லூரியில் விண்ணப்பம் ரூ 4. அடுத்ததாக அங்கிருந்து நுங்கம்பாக்கம், ரயில் டிக்கட் 35 பைசா.
லயோலா கல்லூரியில் விண்ணப்பம் ரூ3, தொடர்ந்து, பச்சையப்பன் கல்லூரியில் விண்ணப்பம் ரூ2. கையில் 1 ரூபாய் 25பைசா இருந்தது. நுங்கம்பாக்கத்தில் இருந்து மாம்பலம் செல்ல கட்டணம் 30 பைசா. கையில் இருந்த 25பைசாக்கு டிக்கட் வாங்க முடியாமல் கோடம்பாக்கம் வரை நடை, கோடம்பாக்கம் ரயில் நிலையத்தில் விசாரிக்க மாம்பலம் செல்ல கட்டணம் 030 பைசா. அதாவது குறைந்த பட்ச கட்டணம்.

கையில் இருந்த ரூ.100ஐ கொடுத்து டிக்கட் கேட்டதும், புக்கிங் கிளார்க் சரமாரியாக பேச, வேறுவழியின்றி
மாம்பலம் வரை நடை, ஒரு 5 பைசா படுத்திய பாடு இது!
(எழுத்தாளர் பாரதிராஜனின் இயற்பெயர் ரங்கராஜன் , பாரதியார் பாடல்கள் மேல் உள்ள காதலால் பாரதிராஜன் என்கிற புனைப்பெயரில் கதை கட்டுரை மற்றும் கவிதை எழுதி வருகிறார். சென்னை அம்பத்தூரில் வசித்து வருகிறார்)
Short and Sweet Story: ஒரு 5 பைசா படுத்திய பாடு!
Everything had beauty.. ஆனால் எல்லோராலும் காண முடியாதது!
ஆடி மாதம் அம்மன் மாதம்
Short Story: கிணறு ஒரு சுகம்!
ஆடி வெள்ளி!
குமூகத்தில் விந்தையான வியப்பு
Aadi Month: ஆடி பெயர் வந்தது எப்படி?
ஒற்றைக்கால் கொலுசு
ரஷ்ய எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா மீது 100% வரி? அமெரிக்க நாடாளுமன்றத்தில் புதிய மசோதா
{{comments.comment}}