- மும்மொழிக் கவிஞர் ஆய்க்குடி பசுபதி குமாரசுவாமி
ஆடி வெள்ளி வந்தது!
ஓடி வெள்ளி வந்தது!
பாடி வெள்ளி வந்தது!
வாடி வள்ளி! நாம்
தேடும் வெள்ளி
என்று வாங்குவது?
வெள்ளி போய்
வெள்ளி வந்தால்
வெள்ளி விலை ஏறுது!
தள்ளி நின்று
பார்ப்பதாகத்தான் நமக்கு
வெள்ளி காட்சி கொடுக்குது!

ஆடி வெள்ளி போய்
ஆவணி வெள்ளி வந்தாலும்
நாம் தேடும் வெள்ளியை
வாங்க முடியுமா?
அதற்காக நாம் என்றும்
ஏங்க முடியுமா?
உனக்கு வெள்ளிக் கொலுசு
வாங்கா விட்டால் என்னால்
தூங்க முடியுமா!
வெள்ளிக்கு ராக்கெட்
அனுப்பியது போல்
வெள்ளி விலை ஏறுது!
சுள்ளி பொறுக்கும்
ஏழை எல்லாம் என்று
வெள்ளி காண்பது?
வெள்ளிச் சுக்கிரன்
வேந்தன் எல்லாம்
ஏழைகளின் எதிரியோ?
வெகு தூரமோ?
(கவிஞர் பசுபதி குமாரசுவாமி. தமிழ் ஆங்கிலம் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் கவிதை எழுதி வருகிறார். தொழிற்பயிற்சி நிலையப் புத்தகங்கள் 44 புத்தகங்களை ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழி பெயர்த்துள்ளேன்).
RIP Deva: ‘தேனிசைத் தென்றல்’ தேவா மறைந்தார்.. கண்ணீர் மல்க திரையுலகினர், ரசிகர்கள் அஞ்சலி!
விஜய்யை முதலில் பாட வைத்தவர்.. ரஜினிகாந்த்துக்கு Title Vibe கொடுத்தவர்.. மறக்க முடியாத தேவா!
தேனிசை வானில் கலந்தது!
ஊருக்கு தான் உபதேசமா?: முதல்வர் விஜய்யை கடுமையாகச் சாடிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!
இளையராஜா -தேவா சந்திப்பு கடைசி வரை நடக்காமலேயே போய் விட்டதே!
களவும் கற்று மற.. இந்தப் பழமொழியோ நிஜமான அர்த்தம் என்ன தெரியுமா?
காவ்யா மாறன் இனி ரஜினிகாந்த்தை எப்படிக் கூப்பிடுவார் தெரியுமா? - அனிருத்துடன் தேதி குறிச்சாச்சு!
தென்தமிழ் தலையங்கம்: உலக காயங்கள் தினம் - கணப்பொழுதில் மாறும் வாழ்க்கை - ஒரு எச்சரிக்கை மணி!
கிளிகள் கூவும் தேனிசை தந்தவர் - தேவா!
{{comments.comment}}