அன்புள்ள என் செல்ல அண்ணா வணக்கம்டா!
உன் அருமை தம்பி (அதாவது இந்த வீட்டின் அதிகாரப்பூர்வ ஏகபோக உரிமையாளன்) எழுதும் வரலாற்றுச் சிறப்புமிக்க மடல்!
இன்னைக்கு 'உலகக் கடிதம் எழுதும் தினம்'! உடனே "என்னடா இவன், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் காலத்துல லெட்டர் எழுதிக்கிட்டு இருக்கான்"னு மைண்ட் வாய்ஸ்ல திட்டாத. இன்னைக்கு ஒரு நாளாவது நாம பேப்பர், பேனாவை தொடுவோம்னு பார்த்தா... வீட்ல பேனாவே இல்லை! கடைசியா பக்கத்து வீட்டு அங்கிள்கிட்ட "நாளைக்கு தந்துடுறேன்"னு பொய் சொல்லி வாங்கிட்டு வந்த பேனால தான் இதை எழுதுறேன்.
முதல்ல வீட்ல நடக்குற கலாட்டாக்களைச் சொல்றேன், கேளு. நீ ஊர்ல இல்லாததால அம்மாவுக்கு ஒரே கவலைதான்... ஆனா உன்னை நினைச்சில்லை! "ஐயோ, என் மூத்த பையன் இல்லாம வீட்ல இருக்குற ஸ்நாக்ஸ் டப்பாலாம் அப்படியே நிறைஞ்சு வழியுதே"ன்னு ரொம்ப ஃபீல் பண்றாங்க. நீ இருந்தாதான் டப்பாவுக்குள்ள நாக்கை விட்ட வழிச்சு எடுத்துடுவியே.. நல்லவேளை டப்பா தப்பிச்சுச்சு!

அப்புறம்டா, நீ போனவாட்டி வந்தப்போ விட்டுட்டுப் போன அந்த ப்ளூ கலர் டி-ஷர்ட்டை நேத்து நான் போட்டுட்டு வெளிய போனேன். அம்மா பார்த்துட்டு "அண்ணன் ஷர்ட்டை திருடிப் போட்டுட்டு போறியா?"னு கேட்டாங்க. "இல்லைம்மா, அவன் நினைவா போட்டுக்கிறேன்"னு ஒரு செண்டிமெண்ட் டயலாக் விட்டேன் பாரு... அம்மா கண்ணுல தண்ணியே வந்துடுச்சுடா.. அப்படியே திருப்பி விட்டா.. காவிரி ஆத்தையே நிரப்பிடலாம்.. அம்புட்டு வாட்டரை வீணாக்கிருச்சு தாய்க் கிழவி.. ஆனா உண்மை என்னன்னா, அந்த ஷர்ட் எனக்கு செமையா ஃபிட் ஆகுதுடா! இனிமே அது என்னோடது தான், தேடாத மறந்துரு!
அப்புறம், போன வாரம் உன்னோட பழைய சைக்கிளை எடுத்துட்டு கடைக்கு போனேன். நடு ரோட்டுல செயின் கழண்டு விழுந்துருச்சு. அதை மாட்டுறேன்னு கை முழுக்க கிரீஸை அப்பிட்டு, வீட்டுக்கு வந்து உன் பெட்ஷீட்ல தான் கையைத் துடைச்சேன்! அம்மா பார்த்துட்டு என்னை வெளுத்து வாங்கிட்டாங்க. "எல்லாம் உன் அண்ணன் உனக்கு சொல்லித் தந்த பழக்கம்"னு வழக்கம்போல பழி முழுக்க உன் மேலதான் விழுந்தது. நீ இல்லாதப்பவும் உன்னை மாட்ட வைக்கிற இந்த திறமை எனக்கு கடவுள் கொடுத்த வரம்டா பிக் பிரதர்!
அப்புறம், உன் ரூம்ல இருக்குற சீக்ரெட் டிராயரை (நீதான் அதை சீக்ரெட்னு நினைச்சுட்டிருக்கே.. நான் ஈஸியா கண்டுபிடிச்சுட்டேன்) நேத்து தெரியாம தொறந்தேன்டா (வேணும்னே தொறக்கலடா சத்தியமா!). அதுக்குள்ள இருந்த அந்த சாக்லேட் கவர்ஸ், அரைகுறை டிராயிங்ஸ், அப்புறம் யாருக்கோ எழுத நினைச்சு அனுப்பாத அந்த அரைகுறை லவ் லெட்டர்... எல்லாத்தையும் மேலே எடுத்து வச்சு.. நல்லா சூப்பரா போட்டோ எடுத்து பத்திரமா வச்சிருக்கேன். அடுத்த தடவை நீ என்கூட சண்டைக்கு வந்தா, இந்த ஆவணங்கள் அனைத்தும் 'அம்மா கமிஷன்' முன்னாடி சமர்ப்பிக்கப்படும் என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்!
வேலையெல்லாம் எப்படி போகுது.. ஒழுங்கா வேலையைப் பாரு.. அதுக்காக ரொம்ப ஸ்ட்ரெஸ் எடுத்துக்காத. உடம்பப் பாத்துக்கோடா. டைமுக்கு சாப்பிடு. அம்மா உனக்கு பார்சல் அனுப்பின காரச்சேவை நான் பாதியைக் காலி பண்ணிட்டு மிச்சத்தத்தான் உனக்கு அனுப்பினேன்.. உன்னோட உடம்பு எடையை மெயின்டேன் பண்ண நான் என்னெல்லாம் தியாகம் பண்ண வேண்டிருக்கு பாரு!
சரிடா, கடித தினத்துக்காக எழுதின இந்த 'காவியம்' இதோட முடியுது. இந்த லெட்டரைப் படிச்சுட்டு எனக்கு திருப்பி லெட்டர் எழுதி அஞ்சல் பெட்டியைத் தேடி ஓடாத... அதுக்கு பதிலா கூகுள் பே-ல ஒரு 500 ரூபாய் அனுப்பி விடு. தம்பி தம் பிரியாணி சாப்பிட்டு உன்னை மனசார வாழ்த்துறேன்!
அடுத்த வாரம் வீட்டுக்கு வரும்போது அந்த பிளாக் ஷூவையும், என் ஹெட்போனையும் மறக்காம எடுத்துட்டு வாடா எருமை மாடு..!
இப்படிக்கு,
உன் செல்ல (மற்றும் ஒரே) தம்பி
பி.கு: அடுத்த முறை ஊருக்கு வரும்போது நாம ரெண்டு பேரும் சேர்ந்து பண்ண போற பிளான் என்னன்னு யோசிச்சு வச்சிருக்கியா?
இப்படியெல்லாம் கடிதம் எழுதிய அந்த சுகந்தமான அனுபவம் இப்போது யாருக்காவது இருக்காது.. இருக்காது.. அதுதான் எல்லோருமே மெஷின்களாக மாறிப் போயிட்டோமே.. பிறகெப்படி கிடைக்கும் இந்த சுவாரஸ்ய அனுபவம்.. கடிதம் எழுதுவது ஒரு கலை.. அந்தக் கலையை மறந்த தலைமுறையாக மாறிப் போய் நிற்கிறோம்.. குறைந்தது இன்றாவது யாருக்கவது ஒரு கடிதம் எழுதிப் பாருங்கள்.. அந்த சுகமே தனிங்க!
World Letter Writing day: கஷ்டப்பட்டு கடிதம் எழுதி எத்தனை நாளாச்சு!
கரிய நிற காகமே.. காத்திருப்பேன் உனக்காக!
செப்டம்பர் மாதம்.. செப்டம்பர் மாதம்.. 2026ம் ஆண்டின் 9வது மாதம்.. சிறப்புகள்!
மறக்க முடியுமா!
பாட்டிகள் பற்றிய சுவாரஸ்யமான கட்டுரை!
செம்மொழியான தமிழ் மொழியே
தாங்கி பிடிக்க தாயும் தூக்கி நிறுத்த தந்தையும் இருந்தால்!
இயற்கை நீதி!
பால் முதல் மின்சாரம் வரை...110 விதியின் கீழ் முதல்வர் விஜய் இன்று வெளியிட்ட 6 அறிவிப்புக்கள்
{{comments.comment}}