- தி. மீரா
எழுதும் கைநுணுக்கத்தின்
இனிய நினைவுகளுக்கு வணக்கம்
காகிதத்தில் மலர்ந்த
மனம் திறந்த வார்த்தைகள்
தூரத்தை நெருக்கமாக்கும் தீபங்கள்
“நலம் நலமறிய ஆவல்”
அன்புள்ள என்ற ஆரம்பம்
என்ற வரிகளில் தொடங்கும்
அன்பின் முதல் துடிப்பு,
அம்மா, அப்பா, நண்பர்,
ஆசிரியர், காதலி,
யாவருக்கும் செல்லும்
உள்ளத்தின் நேரடி மொழி

மையிலே கலந்த உணர்வுகள்
கண்ணீராய் வழிந்தாலும்
அவை ஒவ்வொன்றும்
நினைவாக உறையும்
காத்திருப்பு நெடியதாய் இருந்தாலும்
கடிதம் வந்த கணம்
மகிழ்ச்சி மலர்கிறது
அஞ்சல் பெட்டிக்குள் விழும்
ஒரு சிறு உறை கூட
பாசத்தின் பெரிய பயணம்
இன்றைய வேக உலகில்
மெதுவாய் எழுதப்படும்
ஒரு கடிதம்
நெஞ்சின் நிழலாகத் தங்கும்
எழுதும் ஒவ்வொரு சொல்லும்
அன்பின் அச்சாகி,
வாசிக்கும் ஒவ்வொரு நொடியும்
உறவின் இசையாகி
உலக கடித தினம்
நினைவுகளை இணைக்கும்
மனத்தின் முத்திரை
கைஎழுத்தின் அழகு
கரைந்திடாத காதல்
கடிதம் என்பது
காலம் காப்பதற்கான
கருணைமிகு கலை
அந்த இதயத்தின்
அழியாத மொழி.
(தி.மீரா, ஈரோடு)
போராளிகளின் வரலாற்றை சற்றுப் படியுங்கள் தம்பி.. முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
அத்தனை நீளமாகப் பேசியும் detention copy பற்றி மூச்சுவிடவில்லையே.. ஸ்டாலினுக்கு தவெக கேள்வி
தாராபுரம்: அமராவதி ஆற்றின் கரையில்… மாறிக்கொண்டே இருக்கும் அரசியல் களம்!
மதுராந்தகம்.. ஏரிகாத்த ராமர் முதல் தேர்தல் களம் வரை… தனித்துவம் கொண்ட தொகுதி!
தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை
இளையராஜாவுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் பின்னணி!
தாய்மாமன் தங்க மோதிர திட்ட டெண்டரை எதிர்த்த வழக்கு தள்ளுபடி
மடப்புரம் அஜித்குமார் வழக்கு: 4 போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு!
தவெக.,விற்கு மாநிலக் கட்சி அங்கீகாரம்: 'விசில்' சின்னத்தை உறுதி செய்தது தேர்தல் ஆணையம்!
{{comments.comment}}