- ஸ்வர்ணலட்சுமி
பராபவ வருடம் 2026 ஆவணி மாதம் 15 ஆம் நாள் செவ்வாய்க்கிழமையான இன்று செப்டம்பர் முதல் தேதி பிறந்துள்ளது.
செப்டம்பர் பெயர்க் காரணம் :
செப்டம்பர் என்பது கிரெகோரியன் நாட்காட்டியின் படி ஆண்டின் ஒன்பதாவது மாதம் ஆகும். 'செப்டம்பர்' என்ற பெயர் ' செப்டம்' என்ற இலத்தின் வார்த்தையில் இருந்து வந்தது என்று கூறப்படுகிறது. பழங்கால ரோமானிய நாட்காட்டியில் மார்ச் மாதம் முதல் மாதமாக கருதப்பட்டது.வ
அதன்படி கணக்கிட்டால் செப்டம்பர் ஏழாவது மாதமாக இருந்ததால் இப்பெயர் பெற்றது. ஏனெனில் செப்டம் என்பதற்கு 7 என்று பொருள். பின்னர் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்கள் சேர்க்கப்பட்டு இந்த மாதம் ஒன்பதாவது மாதமாக மாறிய பிறகும் பழைய பெயரே நிலைத்து விட்டது என்று கூறப்படுகிறது.
செப்டம்பர் மாத விசேஷ, விரதம் மற்றும் பண்டிகை நாட்கள்:

செப்டம்பர் 2: புதன் சஷ்டி விரதம்.
செப்டம்பர் 3 :வியாழன் கிருத்திகை.
செப்டம்பர் 4: வெள்ளி கோகுலாஷ்டமி.
செப்டம்பர் 5 :சனி ஆசிரியர்கள் தினம் (டாக்டர் சர்வ பள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்த நாள்).
செப்டம்பர் 7 :திங்கள் ஏகாதசி விரதம்.
செப்டம்பர் 8: செவ்வாய் பிரதோஷம். சர்வதேச எழுத்தறிவு தினம்.
செப்டம்பர் 9: புதன் மாத சிவராத்திரி. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் தேரோட்டம்.
செப்டம்பர் 10 :வியாழன் அமாவாசை.
செப்டம்பர் 14: திங்கள் விநாயகர் சதுர்த்தி., இந்தி திவஸ்( இந்தி மொழி தினம் ).
செப்டம்பர் 15: செவ்வாய் பொறியாளர்கள் தினம். பாரத ரத்னா விஸ்வேஸ்வர அய்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
செப்டம்பர் 17: வியாழன் சஷ்டி விரதம் (வளர்பிறை).
செப்டம்பர் 18: வெள்ளி புரட்டாசி 1.
செப்டம்பர் 21: திங்கள் சர்வதேச அமைதி தினம்.
செப்டம்பர் 22: செவ்வாய் ஏகாதசி விரதம்.
செப்டம்பர் 24: வியாழன் பிரதோஷம்.
செப்டம்பர் 26: சனி பௌர்ணமி.
செப்டம்பர் 27 :ஞாயிறு உலக சுற்றுலா தினம்.
செப்டம்பர் 29: செவ்வாய் சங்கடஹர சதுர்த்தி.
செப்டம்பர் 30: புதன் கிருத்திகை விரதம்.
ஆவணி மாதமும், புரட்டாசி மாதமும் சேர்ந்தஇந்த செப்டம்பர் மாதம் முழுமுதற்கடவுளான விநாயகர் அருளால் அனைவரும் நல்வாழ்வு வாழ்வோமாக. மேலும் இது போன்ற சுவாரஸ்யமான தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன். எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி பாலசுப்ரமணி.
செப்டம்பர் மாதம்.. செப்டம்பர் மாதம்.. 2026ம் ஆண்டின் 9வது மாதம்.. சிறப்புகள்!
மறக்க முடியுமா!
பாட்டிகள் பற்றிய சுவாரஸ்யமான கட்டுரை!
செம்மொழியான தமிழ் மொழியே
தாங்கி பிடிக்க தாயும் தூக்கி நிறுத்த தந்தையும் இருந்தால்!
இயற்கை நீதி!
பால் முதல் மின்சாரம் வரை...110 விதியின் கீழ் முதல்வர் விஜய் இன்று வெளியிட்ட 6 அறிவிப்புக்கள்
ஒரே நாளில் மதுவிலக்கு கொண்டு வர முடியும்...அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேச்சால் அதிர்ந்த சட்டசபை
மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய அறிவிப்புகள்: இலவச ஸ்கூட்டர், பஸ்களில் இலவச பயணத் திட்டம்
{{comments.comment}}