சேலம் மாநகரில் களைக்கட்டும் ஸ்ரீ ராஜகணபதி கோவில் கும்பாபிஷேக திருவிழா

Aug 27, 2026,04:33 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


மாங்கனி நகர் சேலம் மாநகரில் நடுப்பகுதியில் முதல் அக்ரஹாரம் தேரடி சந்திப்பு பகுதியில் அமைந்துள்ள மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு ராஜகணபதி திருக்கோவில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா வருகிற ஆகஸ்ட் 30ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. 


கும்பாபிஷேக பெருவிழா ஞாயிறு காலை 7:00 மணி முதல் 9:00 மணிக்குள் நடைபெற இருப்பதை தொடர்ந்து சேலம் மாநகரமே கோலாகலமாக  களை கட்டுகிறது.


"ஓம்" என்ற பிரணவத்தின் நாயகனாக எழுந்தருளி வேண்டியவர்களுக்கு, வேண்டிய வரங்களை வழங்கும் அருள்மிகு ராஜகணபதி பெருமாளுக்கு ஜீர்ணோத்தாரண  அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக விழா ஸ்ரீ பராபவ வருடம் ஆவணி மாதம் 13ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை வெகு விமர்சையாக நடைபெற உள்ளது.


கும்பாபிஷேக பெருவிழாவின் நிகழ்ச்சி நிரல்களை  இப்பதிவில் காண்போம்.


24.08.2026 ஆவணி மாதம் 7 ஆம் தேதி திங்கட்கிழமை காலை 9:00 மணி முதல் பூஜைகள் வெகு சிறப்பாக நடைபெற்று வருகின்றது. பக்தர்கள் இவ்விழாவில் கலந்து கொள்ள திரளாக வந்த வண்ணம் உள்ளனர்.


27.08.2026 ஆவணி 10 வியாழக்கிழமை :




மாலை 5:30 மணிக்கு மேல். மங்கள வாத்தியம், திருமுறை பாராயணம், சர்வ சாந்தி கர திசா ஹோமம், சாந்தி ஹோமம், வாஸ்து சாந்தி நடைபெறுகிறது.


28.08.2026 ஆவணி 11 வெள்ளிக்கிழமை காலை 8:00 மணிக்கு மேல்.


மங்கள வாத்தியம், திருமுறை பாராயணம், மூர்த்தி ஹோமம்,சங்கீதா ஹோமம், ஆசாரிய தசவித ஸ்நானம், தீர்த்த சங்கர ஹணம்,அக்னி சங்கர ஹணம், யாகசாலை அலங்காரம், பிம்பஸ் ஸ்தாபனம், மருந்து சாத்துதல்.


மாலை 4:30 மணிக்கு மேல்.


மங்கள வாத்தியம், திருமுறை பாராயணம், அங்குரார்பணம், களதுக யாகம், ஆசாரிய,ரித்விக், எஜமான ரக்ஷா பந்தனம், விசேஷ  சந்தி, அதிவாசயாக மண்டப பூஜை, கும்பா லங்காரம், கலா கர்ஷணம், யாத்ரா ஹோமம், க்க்ஷண ஹோமம், யாத்ரா தானம், தச தானம், யாகசாலை பிரவேசம்,பச்சை சாத்துபடி,முதல் கால மகா பூர்ணாஹூதி, தீபாராதனை.


29.08.2026 ஆவணி 12 சனிக்கிழமை காலை 8:00 மணிக்கு மேல்.


மங்கள வாத்தியம், திருமுறை பாராயணம், விசேஷ சாந்தி, சிகப்பு சாத்துப்படி,பாவ நாபிஷேகம், இரண்டாம் கால யாக பூஜை,  சன்னவதி( 96), திரவிய ஹோமம், மகா பூர்ணாஹூதி, உபசாரண தீபாராதனை.


மாலை 4:30 மணிக்கு மேல் .


மங்கள வாத்தியம், திருமுறை பாராயணம், விசேஷ சந்தி,மஞ்சள் சாத்துபடி,  பாவனா பிஷேகம் , மூன்றாம் கால யாக பூஜை, தீப ஸ்தாபனம்,பிம்பசுத்தி, ரக்ஷாபந்தனம், தத்வார்சனை, நாடி சந்தானம்,

ஸ்பர்சா ஹூதி, திரவ்யாஹூதி, மகா பூர்ணாஹூதி,உபசார தீபராதனை.


30.08.2026 ஆவணி 13 ஞாயிறு காலை 4:00 மணிக்கு மேல் .


மங்கள வாத்தியம், திருமுறை பாராயணம், விசேஷ  சந்தி,  பாவனா பிஷேகம், வெள்ளை சாத்துபடி, நான்காம் காலையாக பூஜை, திரவிய ஹூதி .


வஸ்திராஹூதி, மகா  பூர்ணாஹூதி ,யாத்ரா ஹோமம், க்க்ஷண  ஹோமம்,யாத்ரா தானம், தசதானம்.


காலை 7:15 மணிக்கு கலச புறப்பாடு.


காலை 8:10 மணிக்கு மேல் அருள்மிகு ராஜகணபதி விமானம், முகப்பு விமானம் மற்றும் த்வஜஸ்தம்ப மகா கும்பாபிஷேகம்.


காலை 8:35 மணிக்கு மேல் மூலஸ்தான அருள்மிகு ராஜ கணபதி மகா கும்பாபிஷேகம், மகாதீப ராதனை,.

காலை 9:00 மணிக்கு மேல்.ஆசாரிய உற்சவம், எஜமான உற்சவம் .

காலை 11:00 மணிக்கு மேல் மகா அபிஷேகம், அன்னதானம் நடைபெறும்.

மாலை 6:00 மணிக்கு மேல் திருக்கல்யாணம்.


இரவு 8 மணிக்கு மேல். 1000 இசைக் கலைஞர்கள்  மேள தாளம் முழங்க, பாரம்பரிய நாட்டிய நடனங்கள் நடைபெற ராஜகணபதி பெருமாள் புஷ்ப சத்தாபரணத்தில் திருவீதி உலா நடைபெறும்.


ஸ்ரீ ராஜகணபதி திருக்கோவில் கும்பாபிஷேக விழாவில் அனைவரும் கலந்து கொண்டு இறையருள் பெற வேண்டும்.


மேலும் இது போன்ற  சுவாரஸ்யமான  ஆன்மீக தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன். எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி பாலசுப்ரமணி.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

போராளிகளின் வரலாற்றை சற்றுப் படியுங்கள் தம்பி.. முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

news

அத்தனை நீளமாகப் பேசியும் detention copy பற்றி மூச்சுவிடவில்லையே.. ஸ்டாலினுக்கு தவெக கேள்வி

news

தாராபுரம்: அமராவதி ஆற்றின் கரையில்… மாறிக்கொண்டே இருக்கும் அரசியல் களம்!

news

மதுராந்தகம்.. ஏரிகாத்த ராமர் முதல் தேர்தல் களம் வரை… தனித்துவம் கொண்ட தொகுதி!

news

தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை

news

இளையராஜாவுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் பின்னணி!

news

தாய்மாமன் தங்க மோதிர திட்ட டெண்டரை எதிர்த்த வழக்கு தள்ளுபடி

news

மடப்புரம் அஜித்குமார் வழக்கு: 4 போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு!

news

தவெக.,விற்கு மாநிலக் கட்சி அங்கீகாரம்: 'விசில்' சின்னத்தை உறுதி செய்தது தேர்தல் ஆணையம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்