சென்னை: முதல்வர் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படம் ரிலீசாகும் தேதி குறித்த தகவல் ஒன்று சோஷியல் மீடியாவில் தீயாய் பரவி வருகிறது. இதை விஜய்யின் சினிமா ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
முதல்வர் விஜயின் கடைசித் திரைப்படமாகப் பேசப்படும் ‘ஜனநாயகன்’ திரைப்படம் வரும் ஜூலை 23-ஆம் தேதி உலகெங்கும் வெளியாவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. நீண்ட போராட்டம், தாமதம் மற்றும் விஜய்யின் அரசியல் என்ட்ரிக்கு பிறகு வெளியாகும் படம் என்பதால் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் வரும் ஜூலை 23-ஆம் தேதி (வியாழக்கிழமை) இப்படம் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளதாகக் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, வெளிநாடுகளில் வாழும் தமிழ் ரசிகர்களுக்காக வரும் ஜூலை 24-ஆம் தேதி இப்படம் திரைக்கு வர படக்குழு திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளன.

ஜனநாயகன் படம் இந்த ஆண்டு பொங்கல் ரிலீசாக ஜனவரி 09ம் தேதி அன்று ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டது. ஆனால் சென்சார் சான்று கிடைக்காததால் படத்தை திட்டமிட்டபடி ரிலீஸ் செய்ய முடியவில்லை. அதற்கு பிறகு நீண்ட சட்ட போராட்டம், ஆன்லைனில் ஜனநாயகன் முழு படமும் லீக்கானது உள்ளிட்ட பல பிரச்சனைகளை இந்த படம் சந்தித்தது.
கிட்டத்தட்ட 7 மாத தாமதத்திற்கு பிறகு 12 காட்சிகள், வசனங்கள் நீக்குவதற்கு உத்தரவிட்ட சென்சார் போர்டு, கடந்த வாரம் படத்திற்கு ஏ சான்று வழங்கியது. சென்சார் சான்று கிடைத்து விட்டதால் ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் ரிலீஸ் தேதிக்கு பதிலாக விரைவில் தியேட்டர்களில் சந்திக்கலாம் என்ற வாசகத்துடன் படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. படக்குழு சார்பில் இதுவரை அதிகாரப்பூர்வமாக ரிலீஸ் தேதி அறிவிக்கப்படாத நிலையில், ஜனநாயகன் படம் ஜூலை 23ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக தகவல் ஒன்று சோஷியல் மீடியாவில் தீயாய் பரவி வருகிறது.
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}