ஐபிஎல் 2026 : சென்னை - ராஜஸ்தான் அணிகள் இன்று மோதல்

Su.tha Arivalagan
Mar 30, 2026,11:55 AM IST

கவுகாத்தி : டாடா ஐபிஎல் 2026 டு20 கிரிக்கெட் போட்டித் தொடரில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இரவு 07.30 மணிக்கு இந்த ஆட்டம் துவங்குகிறது.


தமிழக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் சென்னை அணி பங்கேற்கும் போட்டி இன்று நடைபெற உள்ளது. 2026ம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா மார்ச் 28ம் தேதியன்று துவங்கியது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் விளையாடி முதல் போட்டியில் பெங்களூரு வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து நேற்று மும்பையில் நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், கோல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. இதில் மும்பை அணி வெற்றி பெற்றது.




இந்நிலையில் ஐபிஎல் கிரிக்கெட்டின் 3வது போட்டியில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. கவுகாத்தியில் உள்ள ஏசிஏ மைதானத்தில் இந்த போட்டி இரவு 07.30 மணிக்கு துவங்குகிறது. ஏற்கனவே நடைபெற்ற முதல் 2 போட்டியிகளில் வெற்றி பெற்று பெங்களூரு மற்றும் மும்பை அணிகள் தலா 2 புள்ளிகளுடன் சமநிலையில் உள்ளன. இந்நிலையில் இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணியும் 2 புள்ளிகள் பெற்று தர வரிசை பட்டியலில் 3வது இடம் பிடிக்கும்.