Chennai Super Kings vs RR: முன்னாள் அணிகளுக்கு எதிராக களம் இறங்கும் சஞ்சு சாம்சன், ஜடேஜா!

Mar 29, 2026,08:53 PM IST

குவஹாத்தி: ஐபிஎல் 2026 சீசனின் முதல் போட்டியில் நாளை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் மோதவுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ். 


எம்.எஸ். தோனி விளையாட மாட்டார் என்ற கவலையில் ரசிகர்கள் உள்ளனர். இருப்பினும் சஞ்சு சாம்சன் முதல் முறையாக நாளை சென்னை அணிக்காக களம் இறங்கவுள்ளது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


அட்டகாசமான பார்மில் இருக்கிறார் சஞ்சு. சமீபத்தில் நடந்த டி20 உலகக் கோப்பைத் தொடரில் அட்டகாசமாக ஆடி இந்தியா கோப்பையை வெல்லக் காரணமாக இருந்தவர்களில் சஞ்சு முக்கியமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.




பத்தாண்டுகளுக்கும் மேலாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் அடையாளமாகத் திகழ்ந்த சஞ்சு சாம்சன், இந்த முறை சிஎஸ்கே  சீருடையில் களமிறங்குகிறார். தனது முன்னாள் அணிக்கு எதிராக அவர் விளையாடவிருப்பது உணர்வுப்பூர்வமான ஒரு தருணமாக பார்க்கப்படுகிறது. சஞ்சு சாம்சன், ருதுராஜ் கெய்க்வாட்டுடன் இணைந்து சிஎஸ்கே அணியின் தொடக்க வீரராக களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


மறுபுறம், சிஎஸ்கே அணியின் தூணாக விளங்கிய ரவீந்திர ஜடேஜா, இந்த சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடுகிறார். 2008-ல் ராஜஸ்தான் அணிக்காக விளையாடியுள்ளஜடேஜா, மீண்டும் அதே அணிக்குத் திரும்பியுள்ளார்.


சஞ்சு சாம்சன் வெளியேறியதைத் தொடர்ந்து, இளம் வீரர் ரியான் பராக் ராஜஸ்தான் அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். தனது சொந்த ஊரான குவஹாத்தியில் அவர் அணியை வழிநடத்தவுள்ளார். அந்த வகையில் அவருக்கும் இந்தப் போட்டி முக்கியமானது.


சிஎஸ்கே அணியின் ஜாம்பவான் எம்.எஸ். தோனி, தசைப்பிடிப்பு காயம் காரணமாக முதல் இரண்டு வார போட்டிகளில் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது சிஎஸ்கே ரசிகர்களுக்குப் பெரும் ஏமாற்றமாக இருந்தாலும், ருதுராஜ் கெய்க்வாட் தலைமையில் சஞ்சு சாம்சன் மற்றும் இளம் வீரர்கள் அணியை வழிநடத்துவார்கள்.


சிஎஸ்கே அணியில் வேகப்பந்து வீச்சாளர் நாதன் எல்லிஸ் காயம் காரணமாக விலகியுள்ளார், அவருக்குப் பதிலாக ஸ்பென்சர் ஜான்சன் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும், தென்னாப்பிரிக்க வீரர் டெவால்ட் ப்ரீவிஸும் ஆரம்ப கட்ட போட்டிகளில் விளையாடுவது சந்தேகமே.


ராஜஸ்தான் அணியில் சாம் கரண் காயம் காரணமாக விலகியதை அடுத்து, தசுன் ஷனகா அவருக்குப் பதிலாக அணியில் இணைந்துள்ளார்.


இந்த போட்டி குவஹாத்தியில் உள்ள பார்சபாரா மைதானத்தில் நாளை இரவு 7:30 மணிக்குத் தொடங்குகிறது. கடந்த சீசனில் கடைசி இரண்டு இடங்களைப் பிடித்த இவ்விரு அணிகளும், இந்த புதிய சீசனை வெற்றியுடன் தொடங்க கடுமையாகப் போராடும் என்பதில் சந்தேகமில்லை.


சஞ்சு சாம்சன் மற்றும் ஜடேஜா ஆகியோர் தங்களது முன்னாள் அணிகளுக்கு எதிராக எப்படிச் செயல்படப் போகிறார்கள் என்பதே நாளைய போட்டியின் 'ஹாட் டாபிக்'!


கொல்கத்தா அதிரடி ஆட்டம்


முன்னதாக இன்று நடந்த ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸைச் சந்தித்தது. முதலில் விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தனது அபாரமான பேட்டிங் திறனை வெளிப்படுத்தியது. ஆரம்பம் முதலே நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தது கொல்கத்தா அணி. 


டாஸ் வென்ற மும்பை அணி, பவுலிங்கை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியினர் நிதானமாக ஆடி ரன்களை சேர்த்து வருகிறது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

என்னது.. பாஜக வெற்றிக்கு காங்கிரஸ் காரணமா?.. சசிகாந்த் செந்தில் பதிலடி

news

500 ரூபாய் பென்சனுக்காக 90 வயது மாமியாரை முதுகில் சுமந்து சென்ற மருமகள்!

news

Monday Motivation: உரைகாரன்.. மெளனம்.. நம்பிக்கை.. முனைவர் தங்கலட்சுமியின் 3 முத்துக் கவிதைகள்!

news

திங்கள் சிந்தனை: எப்படிப்பட்ட ஆசைக்கு இந்த பிரபஞ்சம் உன்னுடன் வரும்?

news

கோவை கொடூரம்.. கடுமையான நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவு.. முதல்வர் விஜய்

news

அரசுப் பள்ளிகளில் கணினி அறிவியல் பாடம்: அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையனிடம் கோரிக்கை!

news

South West Monsoon: தீவிரமடையும் தென்மேற்கு பருவமழை: சென்னையில் சட்டென மாறிய வானிலை

news

Chettinadu Recipe: தேன் போல தித்திக்கும்.. மாம்பழ குல்ஃபி ஐஸ்!

news

கோவை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்.. அதிர்ச்சியில் தமிழ்நாடு.. அனைத்துக் கட்சிகளும் கடும் கண்டனம்

அதிகம் பார்க்கும் செய்திகள்