சிந்திப்போம்.. அழகானவர்கள் அனைவரும் அன்பானவர்களா??

Su.tha Arivalagan
Jun 26, 2026,03:25 PM IST

- இரா. மும்தாஜ் பேகம்


அழகானவர்கள் அனைவரும் அன்பானவர்கள் என்று கூற முடியாது ஆனால் அன்பானவர்கள் அனைவருமே அழகானவர்கள் தான் 


நேசிப்பவரை நேசிப்பது அன்பு இல்லை நம்மை வெறுப்பவரையும் நேசிப்பது தான் உண்மையான அன்பு 

 

வாழ்க்கையும் கடினமல்ல. வாழ்வதும் கடினமல்ல. நம்மை சுற்றி இருப்பவர்களை சமாளிப்பது தான் மிக மிக கடினம். 


பெண்ணின் அன்பு சிப்பிக்குள் இருக்கும் முத்து போன்றது அதை திறக்கத் தெரியாமலே உடைத்தவர்கள் தான் அதிகம் 




உண்மையை எதிர்கொள்ள துணிச்சல், தவறான செயல்களுக்கு மறுப்பை தெரிவிக்க தைரியம், சரியான செயல்களை செய்தல், இவை மூன்றும் நேர்மையான வாழ்க்கைக்கான மந்திர திறவுகோல்


சாப்பிட்டா வயிறு மட்டும் தான் நிறையும். ஆனால் சாப்பிட்டாச்சன்னு பிடிச்சவங்க கேட்கும் போது தான் மனசே நிறையும் 


பாசம் வையுங்கள் தவறில்லை. ஆனால், பைத்தியமாகி விடாதீர்கள். ஏனென்றால், இங்கு முடிவு இல்லாத வாழ்வும் இல்லை, பிரிவே இல்லாத உறவும் இல்லை, எல்லாம் சில காலம் தான்.


எங்கேயும், யாரிடத்திலும் குறைகளை தேடாமல் நிறைகளை மட்டுமே தேடினால் இந்த உலகம் அழகாக இருக்கும்.