- அ. தாமஸ்
தவறியவர்களைத் தண்டிக்கும் முன் கருணையோடு கண்டியுங்கள். உயர் பதவியில் இருப்பவர்கள் தன் கீழே பணி செய்பவர்களை பொது வெளியில் கண்டித்து தன் மதிப்பை உயர்த்த நினைக்கின்றோம். அதே நேரத்தில் அவர்கள் நிலையை சற்று யோசியுங்கள் அவர்களும் மனிதர்கள்தான். அவர்களுக்கும் குடும்பமும் உறவுகளும் உணர்வும் இருக்கிறது என்பதை மறந்து விடாதீர்கள்.
கடமையில் தவறுபவர்களைக் கருத்தாய் தண்டிப்பதை விட கருணையோடு கண்டிப்பது உயர்வானது. தண்டித்தல் தவறச்செய்யும் கண்டித்தலே தவறைக் களையச் செய்யும்.

பொதுவெளியில் தண்டிப்பதையும் கண்டிப்பதையும் விட தனி அறையில் கருணையோடு கண்டிப்பது அவர்களின் தவறைக் குறைத்து நம் மீது கொண்ட பேரன்பால் பொறுப்பை உணர்ந்து பணி செய்ய வழி செய்யும்.
அறியாமல் தவறியவர்களை அரவணைத்து அறிவுரை கூறுங்கள். அறிந்தே தவறுபவர்களை அடையாளம் கண்டு தவறையும் அதன் விளைவையும் விளக்குங்கள். புரிந்தால் தொடரட்டும் இல்லையே இவ்விடம் களையட்டும்.
(அ.தாமஸ் MSc, Bed, MPhil, MSc(psycho), Fscp(psycho), ஆசிரியர், வாணி கிராமம், சிவகங்கை மாவட்டம்)
Tuesday Thoughts: அவர்களை விடுங்கள்! நிம்மதியாகப் போகட்டும்!
தென்தமிழ் தலையங்கம்: இதயத்தை நேசிப்போம்.. துடிக்கும் வரை அல்ல, துடிக்கும்போதே!
ஜெம் வீரமணி வழக்கு: முதல்வர் விஜய்யை விசாரிக்கக் கோரி டி.ஆர்.பாலு கோர்ட்டில் மனு
பந்திக்கு முந்து, படைக்குப் பிந்து.. இதுக்கு நிஜமான அர்த்தம் என்ன தெரியுமா?
புரட்டாசி மாதம் விரதம் இருப்பதெல்லாம் சரி.. என்னெல்லாம் சாப்பிடலாம்.. இந்தா பிடிங்க லிஸ்ட்!
Tuesday Special: செட்டிநாடு ரெசிப்பி.. பிஞ்சு சுண்டைக்காயில் பிரியமான பச்சடி.. செம்ம டேஸ்ட்டி!
பன்முகம் கொண்ட மேஜர் சுந்தர்ராஜன்.. Let us know about this Gentleman!
சோழப் பேரரசின் மாபெரும் குலவிளக்கு: பேரரசி செம்பியன் மாதேவி
கணினிக் கல்யாணி.. A Science சிறுகதை!
{{comments.comment}}