தாய்க்காக எதையும் இழக்கலாம்.. ஆனால் யாருக்காகவும் தாயை இழந்து விடாதீர்கள்!

Su.tha Arivalagan
Oct 15, 2026,01:35 PM IST

- இரா.மும்தாஜ் பேகம்


எந்த காலம் காயை கனியாக்குகிறதோ அதே காலம் தான் கனியை அழுகவும் செய்கிறது - புத்தர் 


--


நேரம், நண்பர்கள், உறவுகள், ஆரோக்கியம் இவை எதுவுமே விலை பட்டியலோடு வருவதில்லை. ஆனால், அதை இழக்கும் போது தான் அதன் விலை நமக்கு புரியும் 


--


புயலும் கோபமும் ஒன்றுதான் வீசும் போதும் பேசும்போதும் தெரியாது. அடங்கிய பிறகு தான் தெரியும் அடைந்த சேதம் என்னவென்று. 


--


நாம் கோபப்பட்டு வென்றுவிட்டால் கோபம் பெரியது என்று அர்த்தம் அல்ல. அதை தாங்கிக் கொண்டவர்களின் பொறுமை பெரியது என்றே அர்த்தம். 


--


கோபம் என்னும் கொடிய தீயானது அது எறியப்படும் இடத்தை விட அதை வைத்துக் கொண்டிருக்கும் கரத்தையே பெரிதும் நாசப்படுத்தி விடும்.


--




பணத்தை யாருக்கு வேண்டுமானாலும் செலவழித்துக் கொள்ளலாம். ஆனால், நேரத்தை தகுதியானவர்களுக்கு மட்டுமே செலவழிக்க வேண்டும். 


--


கோபமும் அவசரபுத்தியும் மனிதனை மிருகமாக்குவது மட்டுமின்றி சில நேரங்களில் அனாதையாகவும் ஆக்கி விடுகிறது. 


--


ஒருவர் தன் தாய்க்காக எதையும் இழக்கலாம். ஆனால், எதற்காகவும், யாருக்காகவும் தன் தாயை இழக்கக் கூடாது. 


(இரா.மும்தாஜ் பேகம், திருச்சி. ஓய்வு பெற்ற ஆசிரியர், கவிஞர், எழுத்தாளர்)