Haiku by Ira Mumtaz Begum: கண்ணாடி பெட்டிக்குள்.. கண்ணீர் விடும் மீன்கள்!
Apr 18, 2026,02:31 PM IST
- இரா.மும்தாஜ் பேகம்
பளபளக்கும் சேலையில்
பாவம் கந்தலான வாழ்க்கை
விலை மாதர்கள்.
கண்ணாடி பெட்டிக்குள்
கண்ணீர் விடும் மீன்கள்
விதவைப் பெண்கள்.
நெல்அறுக்கும் இயந்திரம் களத்து மேட்டில்
நேர்த்தியாக நிற்கிறது
நிலம் விற்ற காசில்
உறவுகள் பெருகிக்கொண்டே போகும்.
உள்ளம் மட்டும் தனிமையில்
இதுதான் முதுமையோ?
(கவிஞர் இரா.மும்தாஜ் பேகம், கிரியேட்டிவ் ரைட்டர்ஸ், திருச்சி)