- க. யாஸ்மின் சிராஜூதீன்
திருவிழாவாம் திருவிழா
எங்கள் பள்ளி ஆண்டுவிழா...
மாணவர்கள் மனது மகிழ்ச்சியில்
சிறகு விரித்து பறக்குது...
என்ன பாட்டு பாடனும்
எப்படி ஆட்டம் ஆடனும்...
கலைநிகழ்ச்சி களைகட்டுது
பள்ளி வளாகம் ரசித்து பார்க்குது...
ஆசிரியர்கள் பயிற்சி அளிக்கவே
பிஞ்சுப் பொற்பாதங்கள் போலச்செய்து ஆடுது.....

உற்சாகம் மனதில் கூடுது
என்னால் முடியும் என்று பேசுது....
வளர்ந்த பிள்ளைகள் தானே ஆடுது
வேண்டும் மட்டும் உதவி கேட்குது
பள்ளி முழுக்க பயிற்சியில் மூழ்குது
ஆண்டு விழாக்கு ஆயத்தமானது
ஆண்டு விழாவும் வந்தது
மேடை அலங்காரம் பூண்டது
மாணவச்செல்வங்கள் அழகாய் ஆடினர் .....
இனிய குரலில் பாடினர்
நாடகம் இயல்பாய் நடித்தனர்
மடைதிறந்தவெள்ளம் போல பேசினர்
ஊரே வியந்து பார்த்தது
கைதட்டி ஊக்கம் ஊட்டியது
பெற்றோர் மனமும் மகிழ்ந்தது
வியப்பில் கண்கள் விரிந்தது
பெருமையை தாங்க முடியல
அக்கம் பக்கம் கூறி மகிழ்ந்தனர்
ஆண்டு விழா முடிவிலே
அனைத்து பிள்ளைகள் மீதுதான்
பாராட்டு மழை அருவியாய் கொட்டுது.....
பரிசுப் புதையல் தங்க கையிலே..
மகிழ்ச்சி வெள்ளத்தில் மனது ஆடுது
ஆசிரியர் மனதில் இன்பவெள்ளம் தான் .....
தன் பிள்ளைகள் என்ற உணர்வு அதிகம்தான்.....
உயர உயர ஏற்றிவிடும் ஏணிதான்
தரையில் நின்று ரசித்து பாரக்கும்தான்....
மாணவர்கள் நலனே கண்ணாக
ஒழுக்கம் சிறந்த குணமாக்க
சிறப்பாய் செதுக்கும் ஆசானே
உலகம் வியக்கும் பெற்றோர் ஆவரே
இச்சிறப்பு யாருக்கு கிடைக்கும் இந்த அவனியில்....
மாணவர்கள்அனைவரும்
தன்பிள்ளையென கூறும் உரிமைதான்...
ஆசிரியர்க்கு கிடைத்த வரமாகுமே...
மாணவர்களுக்கு இறைவன் அளித்த ஈடில்லா பரிசாகுமே....
ஆசிரியர்களும் மாணவர்களும்
இன்பக்கடலில் நீந்த...
பெற்றோர்கள் பெருமைக்கடலில் மூழ்க...
நாளை மீண்டும் படிக்க துவங்குது
வருடாவருடம் ஆண்டுவிழா
எங்கள் பள்ளியில் திருவிழா....!!!
(கவிஞர் க.யாஸ்மின் சிராஜூதீன் இடைநிலை ஆசிரியர். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கரடிக்குப்பம். மேல்மலையனூர் ஒன்றியம் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். 26.09.2014 முதல் இடைநிலை ஆசிரியராக 11 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். 2 ஆண்டுகளாக கவிதை, சிந்தனை துளிகள், சிறுகதை, வகுப்பறைக்கு பாடங்கள் தொடர்பான பாடல்கள் எழுதி வருகிறார். பிரதிலிபி தளத்தில் கவிதைகளைப் பதிவிட்டு வருகிறார். தொடுவானம் கவிதை குழுமம் நடத்தும் whatsApp வழியாக கவிதை எழுதும் போட்டியில் தொடர்ந்து கவிதை எழுதி வருகிறார்)
Tamil Nadu Budget: ஆகஸ்ட் 5-இல் தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல்: சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவிப்பு!
பெரம்பூர் தேர்தல் வழக்கு : முதல்வர் விஜய்க்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவு
எம்எல்ஏ.,வை கைது செய்ய முடியுமா?: சபாநாயகர் விளக்கம்!
பிரதமர் மோடி நிபந்தனையின்றி மன்னிப்பு கேட்க வேண்டும் : ராகுல் காந்தி விமர்சனம்
“எங்களுக்கு அநீதி நடந்துள்ளது” – 'ஜனநாயகன்' ரிலீஸ் குறித்து இயக்குனர் எச்.வினோத் பரபரப்பு பேட்டி!
"புத்தகப் பை சுமை குறைக்கப்படும்": பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு!
மக்களவையில் 2ஆவது நாளாக எதிர்கட்சிகள் அமளி: தொடர்ந்து அவை ஒத்திவைப்பு!
பிரதமர் மோடி தலைமையில் தே.ஜ.கூட்டணி எம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டம்
பி.வி. சிந்துவுக்கு விராட் கோலி சொன்ன அந்த ஒரு வார்த்தை.. ஜப்பானில் நடந்த மேஜிக்!
{{comments.comment}}