பி.வி. சிந்துவுக்கு விராட் கோலி சொன்ன அந்த ஒரு வார்த்தை.. ஜப்பானில் நடந்த மேஜிக்!

Jul 21, 2026,05:07 PM IST

டெல்லி: தனக்குள் ஏற்பட்ட ஒரு குழப்பம் தடுமாற்றத்திற்கு விராட் கோலி கொடுத்த ஊக்கமான வார்த்தைதான் தெளிவைக் கொடுத்தது. அதுதான் என்னை ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் பட்டத்தைப் பெறத் தூண்டியது என்று இந்திய பேட்மிண்டன் சூப்பர் ஸ்டார் பி.வி. சிந்து பெருமிதம் வெளியிட்டுள்ளார்.


இந்திய விளையாட்டு உலகின் இரண்டு துருவ நட்சத்திரங்கள் — பேட்மிண்டனில் இருமுறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற பி.வி. சிந்து மற்றும் கிரிக்கெட் உலகின் ரன் மெஷின் விராட் கோலி. வெளிப்பார்வைக்கு இரு வேறு விளையாட்டு தளங்களில் இயங்கினாலும், உச்சக்கட்ட அழுத்தத்தையும், தொடர் தோல்விகளுக்குப் பிந்தைய மனப்போராட்டத்தையும் சந்திக்கும் சாம்பியன்களின் உணர்வுகள் ஒன்றுதான் என்பதை இவர்களின் சமீபத்திய உரையாடல் நிருபித்துள்ளது.


சமீபத்தில் ஜப்பான் ஓபன் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று, வரலாற்றுச் சாதனை படைத்த பி.வி. சிந்து, தனது இந்த பிரமாண்ட மறு வருகைக்கு பின்னணியில் இருந்த ரகசியத்தைக் பகிர்ந்துகொண்டுள்ளார். அது, இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் விராட் கோலி அவரிடம் கூறிய எளிய, ஆனால் மிக ஆழமான ஒரு அறிவுரை.


கடந்த இரண்டு ஆண்டுகளாக காயங்கள், சீரற்ற ஆட்டம், முக்கியமான போட்டிகளில் தோல்வி என சிந்துவின் விளையாட்டு வாழ்க்கை கடும் சவால்களைச் சந்தித்தது. "சிந்துவின் காலம் முடிந்துவிட்டது" என்று விமர்சகர்கள் எழுதத் தொடங்கிய தருணத்தில், சிந்துவின் மனதில் எழுந்த கேள்வி.. "மீண்டும் பழையபடி வெற்றிப் பாதைக்கு திரும்புவது எப்படி?"




நீண்ட நாட்களாகத் தவித்துக்கொண்டிருந்த சிந்து, தனது வாழ்க்கையின் மிகவும் கடினமான சூழலில் விராட் கோலியைத் தொடர்புகொண்டார். தான் மீண்டு வருவதற்கு ஆலோசனை சொல்லுமாறு கேட்டுள்ளார். அப்போது கோலி அவரிடம் கூறிய கருத்து மிகவும் எளிமையானது. விருதுகளையும் கோப்பைகளையும் துரத்துவதை முதலில் நிறுத்து. விளையாட்டின் மீது உனக்கிருந்த அந்த உண்மையான மகிழ்ச்சியை மீண்டும் கண்டுபிடி..  என்று கூறியுள்ளார் கோலி.


மேலும், நீண்ட காலம் சதமடிக்க முடியாமல் தவித்தபோது, தான் எப்படி மீண்டும் ரன் அடிப்பதில் இருந்த ஆட்டத்தின் இயல்பான மகிழ்ச்சியைக் கண்டறிந்தேன் என்பதையும் கோலி பகிர்ந்து கொண்டுள்ளார்.


கோலியின் இந்த எளிய வார்த்தைகள் சிந்து மற்றும் அவரது கணவர் வெங்கட தத்தா சாயின் மனதில் ஆழமாகப் பதிந்தன. கோப்பைகளை வெல்ல வேண்டும் என்ற மன அழுத்தத்திலேயே விளையாடிக் கொண்டிருந்த சிந்துவுக்கு, "நாம் ஏன் பேட்மிண்டன் விளையாடத் தொடங்கினோம்?" என்ற கேள்விக்கான விடை கிடைத்தது.


அதன் பிறகு சிந்துவின் ஆட்டமே மாறத் தொடங்கியது. வெற்றியின் சுமையைத் தலைக்குக் ஏற்றாமல், ஒவ்வொரு ஆட்டத்தையும் ரசித்து விளையாடத் தொடங்கினார். அட்லாண்டாவில் புத்தாக்கப் பயிற்சிகள், புதிய பயிற்சியாளர் இர்வான்ஷ்யாவின் வருகை, டேட்டாக்களின் துணையோடு தனது தாக்குதல் ஆட்டத்தை வலுப்படுத்தினார்.


விராட் கோலியின் அறிவுரையும், குழுவின் உழைப்பும் இணைந்ததன் விளைவு — ஜப்பான் ஓபன் தொடரில் அகானே யமாகுச்சியை வீழ்த்தி முதல் முறை ஜப்பான் ஓபன் பட்டத்தைக் கைப்பற்றினார் சிந்து. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அவர் வென்ற மிகப்பெரிய சர்வதேசப் பட்டம் இதுவாகும்.


விளையாட்டில் சாம்பியன்களுக்குத் தேவைப்படுவது உத்திகள் மட்டுமல்ல; இக்கட்டான சூழலில் வழிகாட்ட ஒரு சரியான வழிகாட்டியும், தெளிவான பார்வையும்தான். அதைத் சரியாக வழங்கி, ஒரு சாம்பியனின் மீட்சிக்குக் காரணியாக அமைந்திருக்கிறார் விராட் கோலி.. சூப்பர்ப் இல்லை!

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Tamil Nadu Budget: ஆகஸ்ட் 5-இல் தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல்: சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவிப்பு!

news

பெரம்பூர் தேர்தல் வழக்கு : முதல்வர் விஜய்க்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவு

news

எம்எல்ஏ.,வை கைது செய்ய முடியுமா?: சபாநாயகர் விளக்கம்!

news

பிரதமர் மோடி நிபந்தனையின்றி மன்னிப்பு கேட்க வேண்டும் : ராகுல் காந்தி விமர்சனம்

news

“எங்களுக்கு அநீதி நடந்துள்ளது” – 'ஜனநாயகன்' ரிலீஸ் குறித்து இயக்குனர் எச்.வினோத் பரபரப்பு பேட்டி!

news

"புத்தகப் பை சுமை குறைக்கப்படும்": பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு!

news

மக்களவையில் 2ஆவது நாளாக எதிர்கட்சிகள் அமளி: தொடர்ந்து அவை ஒத்திவைப்பு!

news

பிரதமர் மோடி தலைமையில் தே.ஜ.கூட்டணி எம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டம்

news

பி.வி. சிந்துவுக்கு விராட் கோலி சொன்ன அந்த ஒரு வார்த்தை.. ஜப்பானில் நடந்த மேஜிக்!

அதிகம் பார்க்கும் செய்திகள்