காற்று
Jun 16, 2026,10:20 AM IST
பருவப்பெண்ணின்
சிரிப்பொலி போல்
தென்னங்கீற்றிடைப்பட்ட
தென்றல்காற்று
காது கடித்து, கன்னம் தடவி
களுக்கென்று சிரித்துச் செல்லும்
ஜன்னலோர சாரல் காற்று
மலர் செண்டு வாசனைப் போல்
மண் வாசம் அள்ளி வரும்
மழைக்காலப் பருவக்காற்று
பனிப்போல கிளுமே
நடுக்கம் தந்து முடக்குமே
வடக்கத்தி வாடைக்காற்று
கோபம்கொண்டகாளிபோல்
கொண்டை விரித்தாடி
கொலை நடுங்கச் செய்யும்
கோடைகால பேய் காற்று
உழைப்பாளி தேகத்தில்
உருண்டுவரும்வியர்வையை
நோகாமல்துடைத்துவிடும்
வசந்த கால காற்று
(இரா. மும்தாஜ் பேகம், கிரியேட்டிவ் ரைட்டர், திருச்சி)