காதல் கெட்ட வார்த்தையா?
- கவிஞர் க. முருகேஸ்வரி
இன்று என் வகுப்பு மாணவர்கள் நான் உள்ளே நுழைந்ததும் கையில் ஆளாளுக்கு ஒரு ரோஜா பூவை எனக்கு எடுத்து நீட்டினர் ... சிலர் கொத்து கொத்தாகவும் கொண்டு வந்திருந்தனர்.... எட்டாம் வகுப்பு மாணவிகள் இரண்டு பேர் வந்தனர்... ஏதாவது சொல்லிவிட்டு ரோஸ் கொடுங்கள் என்றேன்.
ஒரு மாணவி Best miss என்றாள். இன்னொரு மாணவி ஐ லவ் யூ என்று சொன்னாள். நானும் ஐ லவ் யூ டூ என்றேன். அந்த மாணவிகள் சென்ற பிறகு நான்காம் வகுப்பில் ஒரு சுட்டி மாணவி என்னிடம் மிஸ் அந்த அக்கா உங்ககிட்ட ஐ லவ் யூ னு சொன்னாங்களே அது கெட்ட வார்த்தை தானே என்றாள்.
இல்லடான்னு சொல்லி நான் புரிய வைக்கிறதுக்குள்ள பக்கத்துல உள்ள மாணவி மிஸ் நல்ல வார்த்தை தான் நான் சொன்னேன். அவ கேட்கவே மாட்டேங்கிறா என்றாள். நான் லவ் என்றால் அன்புமா .... நீங்க எல்லாரும் என் மேல அன்பா இருக்கறதுனால தான் ரோஸ் எடுத்துட்டு வந்து கொடுத்தீங்க, இல்லையா ..அதுதான் லவ் என்றேன் ... அதற்கு அந்த சுட்டி மாணவி சொன்னாலே பார்க்கலாம் ...மிஸ் அப்போ எங்க அப்பா எதுக்கு எங்க அம்மாக்கு ரோஸ் கொடுத்தாங்க என்றாள்.
உடனே சுதாரித்துக் கொண்டு எனக்கு உங்க மேல் அன்பு. உங்களுக்கு என் மேல் ...உங்க அம்மாக்கு அவங்க அப்பா அம்மா இரண்டு பேரையும் பிடிக்கும் தானே.... அவங்களுக்கு அவங்க அப்பா அம்மா மேல அன்பு.... உங்க அப்பாக்கு அவங்க அப்பா அம்மா பிடிக்கும்தானே ...அப்போ அவருக்கு அவங்க அப்பா அம்மா மேல லவ். ஆமா என்றாள்....உங்க அப்பாக்கு உன்ன பிடிக்குமா என்றேன். ஆமாம் என்றாள். அப்போ உன் மேல லவ் அன்பு ....உங்க அண்ணனை பிடிக்குமா? பிடிக்கும் என்றாள்.
உங்க அப்பாக்கு உன்னையும் உங்க அண்ணனையும் பிடிக்கலாம் ...ஆனால் உங்க அப்பாவுக்கு உங்க அம்மாவை பிடிக்க கூடாதா ...என்று கேட்ட உடனே ... இப்பொழுதும் அந்த மாணவி தான் ஜெயித்தாள். ஸாரி மிஸ் எனக்கு புரிஞ்சிருச்சு என்றாள்....
காதல் கெட்ட வார்த்தை இல்லை என்று நான் என்னதான் புரிய வைத்தாலும்.. இது ஒரு கலாச்சாரச் சீர்கேடு என்று எனக்குத் தோன்றியது.... சில ஆண்டுகள் வரை வெறும் காதலர் தினமாக மட்டுமே இருந்த கொண்டாட்டம் தற்போது வெளிநாட்டு் பாணியில் ரோஸ் டே ப்ரொபோசல் டே என்று போய்க் கொண்டிருக்கிறது ....
இது காதலர்களுக்கு லாபமோ இல்லையோ.... ரோஸ் வியாபாரிகளுக்கு நல்ல லாபம்!
காதல் வாழ்க!!!! (ரோஸ் வியாபாரிகள் வளர்க)!
(கவிஞர் க.முருகேஸ்வரி, இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வயலாநல்லூர், பூவிருந்தவல்லி திருவள்ளூர் . 25 வருட பணி அனுபவம் உள்ளவர். கவிதை, கட்டுரை, சிறுகதை, வகுப்பறை அனுபவம், சினிமா போன்ற தலைப்புகளில் தொடர்ந்து எழுதி வருகிறார். you tube Channel களில் பட்டிமன்றம் பேசியுள்ளார்).