நீங்கா நினைவுகள்

Su.tha Arivalagan
Oct 10, 2026,10:42 AM IST

- கவிச்சுடர் ஜெ. லீலாவதி, மேட்டுப்பாளையம்


பூமிக்கு வரும்முன் 

நமக்காக காத்திருந்த 

உறவுகள் 


வந்து வாழ்ந்ததில் எத்தனை உறவுகள் 

இன்று நம்முடன் இருப்பது 

எத்தனை உறவுகள்?


எத்தனை உறவுகளிடம் 

உரையாடி கொண்டிருக்கிறோம் 


எத்தனை உறவுகளை 

இழந்து தவிக்கின்றோம் 




கடைசி நொடியில் 

நம்மிடம் எதையாவது கூற நினைத்து 

முடியாமல் போன உறவுகள் 


நம்மை பார்க்கத் துடித்து

பார்க்காமல் போன உறவுகள் 


நம் வரவை எதிர்பார்த்து 

ஏமாந்து போன உறவுகள் 


விடையே தெரியாமல்

தன்னை மாய்த்துக் கொண்ட உறவுகள் 


எதிர்பார்க்காமல் தன்னையே இழந்த உயிர்கள் 

இழந்தவர்களை இழந்தது தான் 

எங்கே நம் உறவுகள்?


சில உறவுகளை உதறியது நாம் தானே?


நமக்கு மட்டும் மறு பிறவி உண்டா?


திரும்பிப் பாருங்கள் 

அந்த உறவுகள்

நம்மை இழந்து 

நம்மை ஏக்கத்துடன் 

பார்ப்பது புரியும் 


உடன் இருப்பவர்களை இருக்கும் போதே இறுகப் பற்றிக் கொள்ளுங்கள் 


பற்றை விட்டு விட்டால்...

சென்றவர்களுடன் சேர்ந்து ஏக்கமாய் 

பார்த்துக் கொண்டிருக்க வேண்டியதுதான் 


சென்றவர் கையிலும் 

ஒன்றும் இல்லை 


நாமும் கொண்டு செல்ல ஒன்றுமில்லை 

வருவோம் விடை பெறுவோம் 

அதுமட்டும்தான்!