- ஜோசப் சாம்ராஜ்
ஒரு மாலை நேரம். சங்கரன்கோவில் நீதிமன்றம் அருகில் ஸ்விஃப்ட் பஞ்சராகிபோனது. அருகில் இருந்த தாத்தா கடையில் பஞ்சர் ஒட்ட போனேன்.
அப்படியே தாத்தாவுடன் பேச்சு கொடுத்தேன். நன்றாக பேசினார். அவரது தந்தையும் ஆசிரியர்தானாம். அவர் சரிவர படிக்காததால் இந்த வேலை. படிக்கும் காலத்தில் அசால்ட்டாக இருந்து விட்டார். போக போக தான் தெரியும் வாழ்க்கை எவ்வளவு போராட வேண்டும் என்று.
தாத்தா பஞ்சர் ஒட்டும் அதே நேரத்தில் அருகில் இருந்த இளநீர் கடையில் இளநீர் குடிக்க சென்று அவர் கதை கேட்டேன். ஒரே பெண் குழந்தை. அதை கட்டிக்கொடுத்து விட்டார். மகள் வீட்டில் இருந்து உணவு வந்து விடுகிறது. எழுபது வயதிலும் இளநீர் வியாபாரம். அவரது துணைவியார் கூழ் வியாபாரம்.
ருசி பார்க்க ஒரு டம்ளர் கேட்டேன். சைடிஸ் எனக்கு ரொம்ப பிடித்த கத்திரிக்காய் கூட்டு. செம டேஸ்ட். பாட்டி விறகு அடுப்பில் வைத்து செய்வதாகவும் கொஞ்சம் புளிச்ச தண்ணீர் ஊற்றி காய்த்து மண்பானையில் வைப்பதால் தான் இந்த ருசி என்று கூறினார். ஆமாம் செம டேஸ்ட்.

பஞ்சர் ஒட்டி முடிந்தது. அனைவருக்கும் தேன் வாழைப்பழம் கொடுத்து மகிழ்ந்தேன். பஞ்சர் ஒட்டிய தாத்தா,
இளநீர் கொடுத்த தாத்தா, கூழ் கொடுத்த பாட்டி மூவரும் இதயத்தில் கலந்தனர்.
வாழ்க்கை ஒரு ரயில் பயணம். எத்தனையோ பேர் ஏறுவார்கள் இறங்குவார்கள். இருந்தாலும் இவர்களை போல வெள்ளந்தியான மனிதர்கள் எப்போதும் இதயத்தில் இருப்பார்கள்.
(கட்டுரையாளர் த. ஜோசப் சாம்ராஜ், ஆசிரியர். குருவி குளம் சரகம், தென்காசி மாவட்டம். 33வருடங்கள் ஆசிரியர் பணி. சாலமன் பாப்பையா கற்றுக் கொடுத்த மேடைபேச்சுக் கலை மற்றும் நகைச்சுவை பேச்சைத் தொடர்கிறார்)
சென்னையில் இன்று முதல்வர் விஜய்யை சந்திக்கிறார் ராகுல் காந்தி
மன்னித்து அருளக் கூடியவர் அன்னூர் மன்னீஸ்வரர்!
நீங்கா நினைவுகள்
பஞ்சர் தாத்தா.. இளநீர் தாத்தா.. கூழ் பாட்டி மற்றும் தேன் வாழைப்பழம்!
அரட்டை அரங்கம் விசு.. மறக்க முடியாத மீனாட்சிசுந்தரம் ராமஸ்வாமி விஸ்வநாதன்!
புராணம் அறிவோம்.. நவராத்திரி ஏன் 9 நாட்கள் கொண்டாடப்படுகிறது?
Thentamil Editorial: மனதை நேசிப்போம், நிம்மதியாய் வாழ்வோம்.. உலக மனநல நாள் பிரகடனம்
தனிமை
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் தவெக அமோக வெற்றி.. விஜய்யின் அடுத்த மூவ் என்ன?
{{comments.comment}}