பாரபட்சம் கூடாது!

Oct 06, 2026,04:14 PM IST

- ராஜஸ்ரீ


ரவி, ராமு சகோதரர்கள். ரவிக்கு செல்வம் அதிகமாக இருந்தாலும் குழந்தைப் பேறு இல்லை. ராமு வசதி குறைந்தவன். பள்ளியில் படிக்கும் இரண்டு மகள்கள். 


ராமுவின்  மனைவி கணவன் ராமுவிடம்  நமக்கு வசதி மிகவும் குறைவாக இருப்பதால் ஒரு பெண்ணை உங்கள் அண்ணாவை வளர்க்கச் சொல்லி கேட்கிறீர்களா? என்று கேட்டாள்.


ராமுவும் சரி என்று கூறிவிட்டு ரவியிடம் சென்று விஷயத்தைக் கூறினான். அதைக்கேட்ட ரவி  கோபத்துடன் என்ன இப்படி பொறுப்பற்ற தகப்பனாக பேசுகிறாயே?என்றான்.




ராமு  குழப்பத்துடன்  நான் பொறுப்பற்றவனா? எப்படி?  புரியவில்லையே என்று கேட்டான். அதற்கு ரவி, 

குழந்தைகளிடம் பாரபட்சம் பார்க்கிறாயே. நான் ஒருத்தியை வளர்த்தால்  அடுத்தவளுக்கு ஏக்கம் வந்து விடாதா. அதனால் இருவரையும் நானே வளர்க்கிறேன். அல்லது நீயே வளர்ப்பதற்கு நிதி உதவி புரிகிறேன். சரியா? என்றான்.


ரவியை ராமு  நன்றியுடன் பார்த்தான்.


(ராஜஸ்ரீயின் இயற்பெயர் வி.பி.ஸ்ரீநிவாசன், சென்னை அம்பத்தூரில் வசிக்கிறார். ஓய்வு பெற்ற மத்திய அரசு அலுவலர்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அக்., 11-ல் சென்னை வரும் பிரதமர் மோடி: பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்

news

செவிலியர்கள் கைது மற்றும் போலீஸ் நடவடிக்கை: தவெக அரசுக்கு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம்!

news

தென்தமிழ் தலையங்கம்: டேட்டிங் ஆப் முதல் குழந்தைப் பேறு வரை.. சிங்கப்பூருக்கு வந்த சோதனை!

news

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் 2026: வாக்குப்பதிவு நிறுத்தம்...போலீசுடன் திமுக வாக்குவாதம்!

news

விண்ணில் தந்திடும் வாழ்வில் உயர்வை!

news

பாரபட்சம் கூடாது!

news

மகத்தான மதுரை சின்னப்பிள்ளை!

news

கதையல்ல நிஜம்: "சாண்ட்விச்" ஜெனரேஷன்.. அந்தப் பக்கமும் போகாமல்.. இங்குட்டும் நகர முடியாமல்!

news

Good afternoon Recipe: மென்மையான குலாப் ஜாமுன் செய்வது எப்படி?

அதிகம் பார்க்கும் செய்திகள்