Afternoon Thoughts: தித்திக்கும் தேன் செய்யும் காரியத்தைப் பாருங்களேன்!

Su.tha Arivalagan
Nov 12, 2026,02:57 PM IST

- ஜெயபாரதி மதிவாணன்


தேன்


தேன் மிகவும் இனிப்பானது. 100 வருடங்கள் ஆனாலும் கெட்டுப் போகாது. அப்படிப்பட்ட தேன் செய்யும் காரியத்தைப் பாருங்கள்.


கமுகு மரத்தின் உச்சியில் உண்டான பழம் முதிர்ந்து உதிர்வதால் அப்பழம் நீண்டு வளர்ந்த கரும்பின் உச்சியில் உள்ள முதிர்ந்த தேனடையைக் கீற, அதிலுள்ள தேன் குளத்தில் உள்ள வாளை, வரால்களின் வாயிலே துளித்துளியாய்ச் சிந்தின. அந்தத் தேனை நக்கிய இரண்டும் தம்முள் மாறுபட்டுப் போரிட ஆரம்பித்தது.




உயர்ந்த பெரிய மலைகளில் உலவும் வரையாடுகள் மிதிப்பதால் உடைந்து ஒழுகும் தேன் கூடுகள். அப்படி ஒழுகும் போது தம்மைத் தாங்கிய சந்தன மரம் தளருமாறு அம்மலையைத் தழுவி விழும். அத்தோற்றம் சக்கரத்தையும், சங்கினையும் ஏந்தி உலகை அளந்தவனான திருமாலின் மார்பில் அசையும் மாலையைப் போல விளங்கியது.


அந்த காலத்தில் மக்கள் இயற்கையை ரசித்தது மட்டுமல்லாமல் அதை கடவுளுடன் இணைத்தும் கவிதை எழுதியிருக்கிறார்கள்.


என்னே அவர்களது இறைபக்தி!!!


(நான் ஜெயபாரதி மதிவாணன் விருதுநகர்.  கர்மவீரர் காமராஜர் பிறந்த ஊரில் பிறந்து வாழ்வதில் பெருமையடைகிறேன். இல்லத்தரசி. 2000லிருந்து கொரானா வந்த 2019 வரை 10 நாட்களுக்கு ஒருமுறை நூலகத்திற்குச் சென்று சங்க இலக்கியங்களை எடுத்து வந்து ரசித்துப் படிப்பேன். 2016, 17, 18, ஆகிய மூன்று ஆண்டுகளில் இலக்கிய மன்றம் வீட்டிலேயே வைத்து நடத்தினேன். வருடத்திற்கு மூன்று முறை நடனம், நாடகம், விளையாட்டுப் போட்டிகள் நடத்தினேன். வீட்டில் இருமுறை மிகப் பழைய பொருட்களைக் காட்சிப்படுத்தி அருங்காட்சியகம் அமைத்தேன். 35 பேர் வந்து பார்த்து ரசித்தார்கள். தாங்களும் பழைய பொருட்களைப் பத்திரமாக வைக்கப் போவதாக உற்சாகமாகக் கூறினார்கள். புத்தகங்கள் படிப்பதுதான் என் பொழுதுபோக்கு. பழமை - புதுமை என்ற யுடியூப் சேனலை நடத்தி வருகிறேன்)