ஓர் நதி ஓர் பெளர்ணமி ஓர் ஓடம்!

Su.tha Arivalagan
Apr 25, 2026,12:23 PM IST

- ஜயலட்சுமி, கோழிக்கோடு


வானத்தின் கருமையில்

வெண் திங்கள்

தோன்ற

மெல்ல நடக்கிறேன் நான்   

நிலவை ரசித்தபடி


மதியின் தண்ணொளியில்

ஆற்றங்கரையோரத்தில் யாருமற்ற வேளையில்




உன்னுடனான நேரங்கள்  

படகில் உலாச் சென்றோம்


நீரோடையின் ஓசைகளும்   

உன்முக வடிவும் இரவும்


மனம் மயங்க எழுதினேன் ஒரு கவிதை


சோமனின் சுடரொளி

புவி எங்கும் பரவ

 

நதித் தடங்கள்

சந்திர ஒளிக்கற்றையால்

அழகுற


உன் கரம் பிடித்து

நடந்தேன் உவகையுடனே!