நீங்களும் ஆகலாம்.. கலாம்.. அப்துல் கலாமின் காவியக் கவிதை!

Su.tha Arivalagan
Apr 11, 2026,04:59 PM IST

- கவிக்குயில் ஜெயசுதா


கற்பனையின் காவியம் கவிதை

உள்ளதல்லது உரைப்பது கவிதை

எண்ணத்தை வண்ணமாக்கும் கவிதை,

இயல்புநிலை மாறிவரும் கவிதை


சமர்ப்பிக்கிறேன்

நான் இப்போது அளிக்கிறேன்

கலாமின் காவியக் கவிதை


முயற்சியில்லையெனில் தோற்'கலாம்'

யாரும் நம்மை புறக்கணிக்'கலாம்'

என்றும் நம்மை அருவருக்'கலாம்'

கோபத்தால் முகம் சிவக்'கலாம்'

முடிந்தால் பிறரை மன்னிக்'கலாம்'

சாதூர்யமாய் விவாதிக்'கலாம்'

தகுந்த முடிவு எடுக்'கலாம்'

ஏற்றாற் போல் உணர்ச்சி கொள்ள'லாம்'




முயற்சி தனியாய் முயற்சிக்'கலாம்'

முயற்சித்ததை நடப்பிக்'கலாம்'

அதற்காய் உழைக்'கலாம்'

நினைத்ததை சாதிக்'கலாம்'


அவரை என்றும் பூரணரா'கலாம்'

முயன்று ஒவ்வொன்றையும் விஞ்ஞானியா'கலாம்'

அவர் மண்ணில் மறைந்தாலும் அவர்

அன்பை மண்ணில் விதைக்'கலாம்'

அவரைப் போல் சமுதாயமா'கலாம்'

தமிழில் வித்தகரா'கலாம்'

விஞ்ஞானி மெல்ல அரசனா'கலாம்'

அவரை என்றும் ஆராதிக்'கலாம்'

அவர் பாதம் பூஜிக்'கலாம்'


அவருக்காய் கண்ணீர் வடிக்'கலாம்'

பிரிவிற்காய் மனம் கொதிக்'கலாம்'

அவரை அறிவுக்கெல்லாம் ஆசானாக்'கலாம்'

அவர்தாம் இதோ நம் அப்துல்கலாம்!


முன் ஏறி ஜெயிக்'கலாம்'

சிங்கம் போல் கர்ஜிக்'கலாம்'

பிறர் முன்னேற கொடுக்'கலாம்'

அறிவியல் தமிழை வளர்க்'கலாம்'

ஏவுகணையைத் தொடுக்'கலாம்'

அவர் போல் முன்னேற துடிக்'கலாம்'

அவர் போல் பிறரை (மாணவரை) சீர்திருத்த'லாம்'

அவர் போல் ஆட்சிக்கூடம் அமைக்'கலாம்'

அவர் இந்தியர் அதிலும் தமிழன் என கொக்கரிக்'கலாம்'

அவர் வழியில் என்றும் நடக்'கலாம்'

அவர் கனவை உண்மையாக்'கலாம்'

அக்னிச் சிறகுகளாய் பறக்'கலாம்

2020 வல்லரசாக உழைக்'கலாம்'


அவர் மரணம் 'ஆறாத ரணம்' எனலாம்

அவர் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்'கலாம்'

நீயும் ஒரு நாள் ஆ'கலாம்'

அப்துல்கலாம் இதயத்தில் தோன்றிற்று

ஒரு நிமிடம் பொருத்திக் கொள்ளலாம்

அவரையும் காப்பாற்றிக்கொள்ளலாம்

இலட்சம் பேர் பிறக்'கலாம்'

இலட்சியமின்றி இறக்'கலாம்'.


(ஜெயசுதா, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, பாரிவாக்கம், பூவிருந்தவல்லி, திருவள்ளூர் மாவட்டம்)