கோவில்பட்டியில் சர்க்கஸ்!

Su.tha Arivalagan
Oct 12, 2026,02:36 PM IST

- ஜோசப் சாம்ராஜ்


கோவில்பட்டியில் நீண்ட நாட்கள் கழித்து சர்க்கஸ் வந்தது. சர்க்கஸ் என்றால் கொள்ளை பிரியம். சந்தோஷமாக டிக்கெட் வாங்கி விட்டு மியூசிக் வாசிப்பவர் தெரியும் மாதிரி முன் வரிசையில் அமர்ந்தேன். 


இசை என்பது மனசை தாலாட்டும் ஒரு விஷயம். வாலிப வயதில் பியானோ வகுப்பு சென்றுள்ளேன். அகார்டிங் வாசிக்க பிடிக்கும். முதல் வரிசையில் அருகில் இருந்த பெரியவரிடம் பேச்சு கொடுத்தேன். நன்றாக பேசினார். புதிய நண்பர் கிடைத்துவிட்டார்.


காட்சி ஆரம்பித்தது. அடுத்து அடுத்து மிகவும் விறுவிறுப்பாக நடந்தேறியது. எதையும் குறை சொல்ல முடியாது. ஒவ்வொன்றும் பட்டையைக் கிளம்பியது. ரொம்ப ஆச்சரியமாக வியப்பாக இருந்தது. 


நல்ல திறமைசாலிகள். நிறைய பேர் பர்மாகாரர்கள் போல இருந்தனர். கோமாளிகள் கூத்து கூட செம. பாசஞ்சர் ரயிலில் வரும் நொறுக்கு தீனிகள் போல இங்கும் வந்தது. எனக்கு பிடித்த பாப்கார்ன் கையில். தாத்தா வேண்டாம் என்று சொல்லி விட்டார். 




முடிந்த நேரம் தெரியவில்லை. ஹிந்தி பாடல்கள் அட்டகாசம். இப்போதெல்லாம் சிங்கம் யானை இல்லை. அதை தடை பண்ணிவிட்டார்கள் போல. அதைவிட மனிதர்கள் உழைப்பு புரிகிறது. இன்னும் கொஞ்ச காலம் தான் இதெல்லாம் மறைந்து விடும்.


மக்களே இது போன்ற நிகழ்வுகள் எங்கே நடந்தாலும் குடும்பமாக வந்து பாருங்கள். ஒவ்வொரு நிமிடமும் ஒரு அதிசயம் நமக்கு காந்திருக்கிறது. கூண்டுக்குள் பைக் மூன்று சுத்திய சப்தம் இன்னும் ரீங்காரமிடுகிறது. அந்த பக்கம் போகும் போதெல்லாம் இறைவனை வேண்டிக்கொள்வேன்.


எங்கிருந்தாலும் வாழ்க என்று மனதில் சொல்லிக்கொண்டே வானத்தில் பார்த்தேன். ஒரு நட்சத்திரம் எனை பார்த்து கண் சிமிட்டி யது.


(கட்டுரையாளர் த. ஜோசப் சாம்ராஜ், ஆசிரியர். குருவி குளம் சரகம், தென்காசி மாவட்டம். 33வருடங்கள் ஆசிரியர் பணி. சாலமன் பாப்பையா கற்றுக் கொடுத்த மேடைபேச்சுக் கலை மற்றும் நகைச்சுவை பேச்சைத் தொடர்கிறார்)