அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும்.. நடிகை ஜோதிகா பரபரப்பு பதிவு
சென்னை: மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று நடிகை ஜோதிகா கோரிக்கை விடுத்துள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு எதிராக டெல்லி மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் வலுத்து வருகிறது. இந்த நிலையில் டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் கரப்பான் பூச்சி ஜனதாக் கட்சிக்கு ஆதரவாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் நடிகை ஜோதிகா பகிரங்கமான கோரிக்கையுடன் ஒரு பதிவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும்.
ராஜினாமா செய்யுங்கள்.
மாணவர்கள் மற்றும் நமது தேசத்தின் எதிர்காலத்திற்கு ஆதரவாக நான் நிற்கிறேன்!
பொறுப்புக்கூறலுக்கு (வெளிப்படைத்தன்மைக்கு) ஆதரவாக நான் நிற்கிறேன்!
ஜனநாயக இந்தியாவிற்கு ஆதரவாக நான் நிற்கிறேன்!
சீர்திருத்தப்பட்ட கல்விக்கு ஆதரவாக நான் நிற்கிறேன்!
சோனம் வாங்சுக்குக்கு எனகு மரியாதைகள்.
அபிஜீத் திப்கே மற்றும் சௌரவ் தாஸ்... தாயார்களாகிய நாங்கள் எங்கள் குழந்தைகளை உங்களைப் போல் வளர்க்க விரும்புகிறோம்.
எதையும் மறைக்காமல் வெளிப்படையாக இருக்கும் ஜென் சி (Gen Z) இளைஞர்களை நினைத்து பெருமைப்படுகிறேன்.
ஒன்றிணைந்தால் நாம் தான் இந்தியா என்பதை நீங்கள் நிரூபித்துள்ளீர்கள்.
இந்த அழுத்தத்தை உடைத்தெறிந்ததற்கு நன்றி என்று கூறியுள்ளார்.
மத்திய அமைச்சரை பதவி விலகுமாறு கூறி ஜோதிகா பகிரங்கமாக பதிவு வெளியிட்டிருப்பது திரைத்துறையினர் மத்தியில் பேசு பொருளாகியுள்ளது.