ஜூன் ஆறு வந்தது சிறப்பு நாளே !
- முனைவர் கோ. லதா
உலகம் ஏற்றும் உயர்வு தினமே
போரின் நினைவு பொதிந்த நாளும்
விடுதலை வேண்டி விழித்த நாளே
நார்மண்டி கரையில் நடந்த போரை
நினைவில் கொள்வோம் நல்ல நாளில்
வீரர் உயிரை விதைத்த மண்ணில்
அமைதி வேண்டி அஞ்சலி செய்வோம்
பூச்சி ஒழிப்பு புகழும் நாளே
உலக பெஸ்ட் கண்ட்ரோல் தினமிதே
நோய்கள் குறைக்க நலம் காக்க
மக்கள் அறிவை மலர வைப்போம்
ஸ்வீடன் நாட்டின் சுதந்திர நாளும்
ஜூன் ஆறில் தான் சிறந்து விளங்கும்
கொடியை உயர்தி கொண்டாடும் நாளில்
நட்பை போற்றி நாமும் மகிழ்வோம்
ஓட்டம் உலகை ஒன்றாய் சேர்கும்
குளோபல் ரன்னிங் குலவும் தினமும்
ஆரோக்கியம் வேண்டி அடியை வைப்போம்
உடலும் மனமும் உறுதி பெறவே
பசுமை நோக்கி பாதை அமைப்போம்
அறிவை பரப்பி அமைதி வளர்போம்
ஜூன் ஆறின் புகழ் யாவும் சொல்வோம்
உலகை உயர்தி உயிரை வாழ்வோம்
உலக சுற்றுச்சூழல் தினம்
வந்தது சுற்றுச் சூழல் தினமே
உலகம் ஒன்றாய் உணர்வு கொள்வோம்
மண்ணும் விண்ணும் மாசுபடாமல்
காப்போம் நாமே கடமை என்றே
மரங்கள் நடுவோம் மாசு குறைப்போம்
பசுமை பெருக்கி பாரை காப்போம்
ஆறும் குளமும் அழியாமல் காப்போம்
நீரை சிக்கனம் நின்று செய்வோம்
காற்றை தூய்மை காக்க முயல்வோம்
புகையை குறைத்து புவியை வாழ்வோம்
பிளாஸ்டிக் வேண்டாம் பூமி கெடாது
மண்ணில் மட்கும் மரபை வளர்போம்
உயிரினம் யாவும் உறவாய் வாழ
வனத்தை அழிக்கில் வாழ்வு இல்லை
பறவை விலங்கு பாதுகாப்போம்
சிற்றுயிர்கும் சேமம் தருவோம்
வெப்பம் குறைந்தால் விளைச்சல் பெருகும்
ஓசோன் கிழியில் உலகம் வாடும்
மாற்றம் நம்மிடம் மனதில் தொடங்கும்
சீராய் வாழ்ந்தால் செழிப்பு வரும்
நாளை தலைமுறை நலமாய் வாழ
இன்றே விழிப்பாய் இயற்கை காப்போம்
உலகம் நமது உறவு என்றே
உலக சுற்றுச்சூழல் உயிரை காப்போம்
(பாரத் சேவா ரத்னா. டாக்டர். கோ. லதா, கல்வித் தூதர், பன்முக உலக சாதனையாளர், தமிழக அரசின் நல்லாசிரியர் விருதாளர், சென்னை)