Tamil Poem: பூவே பொன்பூவே

Jun 06, 2026,11:48 AM IST

- பன்முகக் கவிஞர் க.முருகேஸ்வரி


புன்புலத்தில் பூத்திடும் பொன்பூ


முள் செடியில் படர்ந்திடும் முத்துப் பூ..


சங்க காலப் புலவர்களிடம் சல்லாபித்த தங்கப்பூ...


பொன் போர்வை விரித்தது போல் ..


பூமி எங்கும் பூத்திட்ட பொன் மஞ்சள் பூ..


சுட்டெரிக்கும் சூரியனையே சுற்றி வரும் சிங்கார பூ.


சங்கத்தலைவனின் தலைவிக்கு உவமையான அருமை பூ


சிறுநீரக நோய் தீர்க்கும் சின்ன பூ




கண்ணுக்குக் குளிர்ச்சி தரும் வண்ண பூ


சிறு நெருஞ்சியில் சின்னஞ்சிறு மஞ்சள்  பூ ...


பெரு நெருஞ்சியில்

பேரிதழ்‌ கொண்ட பூ...


செப்பு நெருஞ்சியில் ரோஜா நிறப் பூ 


மூலிகைக் குணம் கொண்ட மூன்று வகைப் பூ


முன்னோர்கள் சொல்லி வைத்த அரிய வகைப் பூ


நெருஞ்சிப் பூ நெருஞ்சிப் பூ நெருஞ்சிப்பூ 


நிலமெல்லாம் உன் வனம் தானே நெருஞ்சிப் பூ


பார்த்ததுமே நெஞ்சமெல்லாம் மஞ்சம் கொள்ளும் நெருஞ்சி பூ


வறண்ட நிலத்தில் வாழ்வோர்க்கு நீ தானே  குறிஞ்சி பூ


(கவிஞர் க.முருகேஸ்வரி, இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வயலாநல்லூர், பூவிருந்தவல்லி திருவள்ளூர் . 25 வருட பணி அனுபவம் உள்ளவர். கவிதை, கட்டுரை, சிறுகதை, வகுப்பறை அனுபவம், சினிமா  போன்ற தலைப்புகளில் தொடர்ந்து எழுதி வருகிறார். you tube Channel களில் பட்டிமன்றம் பேசியுள்ளார். சிங்கப்பூர் பொழில் பண்பலையில் கவிதைகள் எழுதுகிறார்.. சிங்கப்பெண், அருந்தமிழ் தாரகை விருதுகள் பெற்றுள்ளார்).

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

news

"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

news

"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!

news

"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!

news

பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி

news

முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

news

மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!

news

கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!

அதிகம் பார்க்கும் செய்திகள்