ஆறடி நிலம் கூட நமக்கு சொந்தம் இல்லையடா!

Su.tha Arivalagan
Feb 25, 2026,03:21 PM IST

- கா.சா.ஷர்மிளா


ஆண் பெண் என்ற வேறுபாடில்லை..

ஜாதி மத கோட்பாடு  இல்லை 

உயர்வு தாழ்வு என்ற பாகுபாடு இல்லை 

வாழ்க்கையின் உண்மை அர்த்தம் புரிகிறது..

பெரியவன் உயர்ந்தவன் என்ற நிலை மாறுகின்றது

ஆதாம் ஏவாளை மண்ணிலே படைத்தான்...




மண்ணிலே படைக்கப்பட்ட உடல் 

இறுதியில் மண்ணுக்கே சென்றடைகிறது..

ஆறடி நிலம் கூட நமக்கு சொந்தம் இல்லையடா 

இப்பூ உலகில் 

பிறகு எதற்கு பொறாமைகள்.. 

பகை குரோதங்கள் விரோதங்கள்...


பூவுலகில் இருக்கும் வரை 

ஒற்றுமையாக மகிழ்ச்சியாக

அனைவருக்கும் உதவியாக இருப்போமாக...

அன்பு ஈகை மனதுடனே வாழ்வோமாக...


(கவிஞர் கா.சா.ஷர்மிளா, கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை ஒன்றியம், பு. முட்லூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி (இந்து)யில் பணியாற்றுகிறார்)