Friday Motivation: கடந்து போனதை நினைத்துக் கவலைப்படாதே..!

Su.tha Arivalagan
Jun 19, 2026,11:38 AM IST

- டி.கலைமணி


என் வாழ்க்கையில் எனக்கு கஷ்டங்களும் வலியும் வேதனைகளும் இருந்தாலும் என் குழந்தைகளின் முகத்தை பார்க்கும் போது என் துன்பங்கள் அனைத்தும் பனி போல் விலகி விடுகிறது....


வெற்றி கதைகளை என்றும் படிக்காதீர்கள். அதிலிருந்து உங்களுக்கு தகவல்கள் மட்டுமே கிடைக்கும். தோல்விக் கதைகளை எப்போதும் படியுங்கள். அது நீங்கள் வெற்றி பெறுவதற்கான புதிய எண்ணங்களை கொடுக்கும்.


கடந்து போனதை நினைத்து கவலைப்படாதே! நீ கவலைப்பட கூடாது என்பதற்காகவே அது கடந்து போயிருக்கும்..


வாழ்க்கை குறுகியது.


அதனை சிறப்பாக வாழுங்கள்...


கோபம் தேவையற்றது அதை தூக்கி எறியுங்கள்..




பயம் மோசமானது அதனை எதிர் கொள்ளுங்கள் .. நினைவுகள் இனிமையானவை, அதை ரசியுங்கள்.. 


மனக் கஷ்டம்னு சொன்னா ஆள் ஆளுக்கு ஆறுதல் சொல்ல வராங்க. அதே பணக்கஷ்டம்ணு சொன்னா எல்லாம் தெறிச்சு ஓடுறாங்க.


இளமையில் பேச நேரமில்லாமல் இருந்தவர்கள்... 

முதுமையில் பேச ஆளில்லாமல் வாழ்கிறார்கள்.


இதுதான் வாழ்க்கை!


(சென்னையைச் சேர்ந்த டி. கலைமணி, பக்தி, தத்துவம் என பல் சுவை பாடல்கள், கவிதைகள் எழுதுவதில் கை தேர்ந்தவர்)