- சசிகலா விஸ்வநாதன்
போதும் போதும்
என்னும் அளவில்,
உண்டு களித்தாயிற்று!
உடுத்தி அலுத்தாயிற்று!
ஊர் உலகம்
பார்த்தாயிற்று!
கோவில் குளம்
சுற்றியாயிற்று!
வேணும் பணம்
சேர்த்தாயிற்று!
தான தருமம்
உவந்தளித்தாயிற்று!
உறவினர், நண்பருக்கு
உதவிகள் பலவும் செய்தாயிற்று.

தேவைகள் குறைந்தாயிற்று.
ஆசைகளும் அறுந்தாயிற்று.
ஆணவம் மண்ணில்
புதைந்தாயிற்று
இன்பமாய், இன்று
இன்னுயிரைவிட, சித்தமாயிற்று!
இருப்பதை நானும் உணர்ந்தாயிற்று
உயிர் அந்தகன் வரவு நோக்க;
அவனோ; அளவிலியின்
ஆணை எதிர் நோக்க....
முதுமை காத்திருக்கிறது
எதிர்பார்ப்பின் அயர்வில்!
(சசிகலா விஸ்வநாதன் - தடய அறிவியல் துறையில் உதவி இயக்குநராக பணி நிறைவில் இருக்கும் முதியவள். அதிகம் அறியப்படாத நான்; இரண்டு வருடங்களாக ஓய்வு நேரத்தில் கவிதைகளும் சிறுகதைகளும் எழுதிக்கொண்டு இருக்கிறேன் . எனது கதைகளும், கவிதைகளும் ,தமிழ் நெஞ்சம்; வானமே எல்லை; கொலுசு;மலர் வனம்; சக்தி பெண்ணிதழ்; ஆகியவற்றில் வெளியாகின்றன. புஸ்தகா நிறுவனம் மூலம் இது வரை நான்கு கதை தொகுப்புகளை வெளியிட்டுள்ளேன்)
கல்யாண விருந்து.. பந்தி முதல் டிஜே நடனம் வரை.. பாப்கார்ன் கல்யாணமும்... பாரதிராஜா ஹீரோயினும்!
செங்கல்பட்டு, திருப்பூர் தவிர... செப் 28 ல் தாய்மாமன் தங்க மோதிர திட்டம் துவக்கம்
"எவன் என்ன சொன்னா என்ன?" - 'பத்தா' ஆடியோ விழாவில் அட்லீ சொன்ன குட்டி ஸ்டோரி
கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபு உடல்நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கை
பிரம்ம தேவர் சரஸ்வதி தேவியை ஏன் திருமணம் செய்து கொண்டார்?
"ஆம்பளைங்கனா ஒஸ்தி, பொம்பளைங்கன்னா மட்டமா..?"
short cute Story: ஆடி வரும் ஆடி.. படியிலிருந்து தள்ளுவார்களா?!
சிந்தனைச் சிதறல்.. வெற்றியும் தோல்வியும், சோகமும் மகிழ்ச்சியும் ,கோபமும் பொறுமையும்!
Short Story : நாளை எண்ணிக்கொண்டிருக்கிறார்!
{{comments.comment}}