விடாமுயற்சி நாயகன் விநாயகன்!
- கலைவாணி ராமு, புதுச்சேரி
விக்ணங்களை கலைபவனே எங்கள் விடாமுயற்சி நாயகனே....
முப்பத்து முக்கோடி நாயகனே முப்பத்திரண்டு உருவங்களை கொண்டவனே....
முருகனுக்கு முன் பிறந்த மூத்தவனே மூஷிகத்தை வாகனமாய் கொண்டவனே.....
அம்மையப்பனை உலகமாய் ஏற்றவனே
ஆண்ட பிரம்மாண்ட நாயகனே.....
தந்தம் இரண்டும் கொண்ட தலைமகனே
தந்தைக்காக பரசுராமரிடம் போரிட்டு ஏகதந்தனாக திகழ்ந்தவனே....
கணங்களின் நாயகனே கஜமுகா சூரனை சம்ஹாரம் செய்தவனே....
கமெண்ட்ல நீரை கவிழ்க்க காகமாக வந்த கந்தர்வ மேனியனே
காவிரி நதியை காத்தவனே...
அனலா சூரனை அழித்ததால் அனலாக கொதித்த உடலை அருகம்புல் கொண்டு தணிந்தவனே....
பாரதம் மகாபாரதம் எழுத தந்தத்தை பேனாவாக கொண்ட தயாபரனே.....
சனீஸ்வரனை வென்று சங்கடங்களை தீர்க்கும் சங்கடஹர சதுர்த்தி விநாயகனாய் நின்றவனே
சித்தி புத்திகளை மணந்த சிவனின் புதல்வனே சித்தி புத்தி விநாயகனே....
மஞ்சளிலே பிடித்திடினும் மங்களங்களை தரும் மங்கள விநாயகனே....
உன் மகிமையை கவி பாட எனக்கு வரம் தருவாய் விடாமுயற்ச்சி விநாயகனே....