Kalaiyarasi Muthuvel Poem: சகிப்பு
May 14, 2026,04:40 PM IST
- கவி. கலை
சத்தியம் பொய்க்கும் போதும்
சத்தமிடாமல் சாந்தப்படுவது
சகிப்பு.
பெற்றாலும் பெண்மையிணைப்
போற்றாமல் ,
பொசுக்கிடும் போதும்
பொறுமை காப்பது
சகிப்பு.
போதனையால் மனம் நிறைவது
சகிப்பு.
திறமைகளைத் திருடியபோதும்
திண்ணமாய் திறந்த மனதுடன்
தினம் நடப்பது
சகிப்பு.
(சொ.கலையரசி, மதுரை மாவட்டம் வாடிப்பட்டியைச் சேர்ந்தவர். தாய் CBSE பள்ளி வேதியியல் ஆசிரியையாக 3 ஆண்டுகள் பணிபுரிந்து வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளாக "எழுதுக" என்னும் புத்தகம் எழுதும் இயக்கத்தோடு இணைந்து எழுத்துப்பணியாற்றி வருகிறார். 1. புழுதிமண் கவிதைத்தொகுப்பு, 2. உடைந்தும் உருவெடு குறுநாவல் என இரு நூல்களைப் படைத்துள்ளார். இறையன்பு IAS முன்னிலையில் அவை வெளியிடப்பட்டன.)