Kalaiyarasi Muthuvel Poem: அழகு
Jun 03, 2026,03:34 PM IST
- கவி. கலை
பசியாய் இருப்போருக்காய்
பசியையும் மறைத்து
பகிர்ந்திடும் போது
பகிர்வும் அழகுதான்?
உண்மையாக உணர்ந்து
உயர்வாய் வாழ்ந்து
உணர்வாகும் போது
உறவுகளும் அழகுதான்!
வழி தடுமாறும் வேளையில்
வழித்தடம் அமைத்து
இழிவான செயல்களைத்
துணிவாகச் செய்தாலும்
இதயம் ஊடுருவும் போது
இறைமையும் அழகுதான்!
(சொ.கலையரசி, மதுரை மாவட்டம் வாடிப்பட்டியைச் சேர்ந்தவர். தாய் CBSE பள்ளி வேதியியல் ஆசிரியையாக 3 ஆண்டுகள் பணிபுரிந்து வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளாக "எழுதுக" என்னும் புத்தகம் எழுதும் இயக்கத்தோடு இணைந்து எழுத்துப்பணியாற்றி வருகிறார். 1. புழுதிமண் கவிதைத்தொகுப்பு, 2. உடைந்தும் உருவெடு குறுநாவல் என இரு நூல்களைப் படைத்துள்ளார். இறையன்பு IAS முன்னிலையில் அவை வெளியிடப்பட்டன.)